2022-ல் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர்.. 25 வருடங்களாக கிடைக்காத மிகபெரிய அங்கீகாரம்

இன்னும் சில தினங்களில் இந்த வருடம் நிறைவடைவதால் சோசியல் மீடியாவில் 2022 இல் சிறந்து விளங்கிய பிரபலங்களை பற்றி அதிகம் பேசுகின்றனர். அதிலும் இந்த வருடம் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் யார் என்பது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது.

மேலும் இவர் இந்த வருடம் மட்டும் எக்கச்சக்கமான விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதிலும் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழில் அதிகபட்சமாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மட்டும் 5 விருதுகள் வழங்கப்பட்டன.

Also Read: அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

அதாவது சூரரைப்போற்று படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான இசையமைப்பாளர் ஜிவி பிரகாசுக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கும் விருது வாங்கினார்.

அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்கான தேசிய விருது சூரரைப் போற்று திரைப்படம் தான் தட்டி சென்றது. இவ்வாறு தேசிய விருது மட்டுமல்லாமல் திரையுலகின பெரும் கௌரவமாக நினைக்கக்கூடிய ஆஸ்கார் விருதுக்கும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரள விட்டிருந்த சூர்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

Also Read: சினிமாவைத் தாண்டி 5 பிசினஸில் மிரள விடும் சூர்யா.. இப்படியும் சம்பாதிக்கலாமா என ஆச்சரியத்தில் கோலிவுட்

இதுமட்டுமின்றி கடந்த இரண்டு முறை தொடர்ந்து ஆனந்த விகடன் வழங்கும் விருதினை தட்டி சென்ற தனுஷை பின்னுக்கு தள்ளி தற்போது நடிப்பு அரக்கனாக ரசிகர்களின் மனதில் குடிகொண்டிருக்கும் சூர்யா சிறந்த நடிகருக்கான விகடன் விருதை பெற்றிருக்கிறார்.

அதேபோன்று இவர் நடித்த ஜெய்பீம் படம் தான் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனருக்கான விருதுகளையும் தட்டி தூக்கியது. இவ்வாறு சூர்யா 1997இல் சினிமாவிற்கு அறிமுகமாகி இப்போது 25 வருடம் கழித்து 2022-ல் தான் அவருக்கு சிறந்த அங்கீகாரத்தை கொடுக்கும் விதத்தில் எக்கச்சக்கமான விருதுகள் அவரைத் தேடி வந்தது. ஆகையால் இந்த வருடம் முழுவதும் கொண்டாடப்பட்ட ஒரே நடிகராக சூர்யா இருக்கிறார்.

Also Read: ஆச்சரியமூட்டும் விகடன் விருதுகளின் மொத்த லிஸ்ட்.. தொடர்ந்து 2 முறை வாங்கிய தனுஷை பின்னுக்குத் தள்ளிய நடிப்பு அரக்கன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்