Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட்டு துணியில் ஜட்டி தச்சு போட்டா இப்படித்தான் இருக்கும்.. மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்
அண்ணாச்சி புண்ணியத்தில் இன்று நெட்டிசன்களுக்கு செம கன்டென்ட் கிடைத்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் வெளிவந்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் தற்போது ரசிகர்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கில் செலவு செய்து பணத்தை வெளியிட்டுள்ள அண்ணாச்சி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து நிச்சயம் நொந்து போய் இருப்பார். அந்த அளவுக்கு இந்த படத்தை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் தியேட்டருக்கு வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் படம் தற்போது பல கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறது.

troll-the legend
தியேட்டரை விட்டு வெளியில் வரும் ரசிகர்கள் அனைவரும் சிரித்தபடியே தான் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சீரியஸ் காட்சிகள் கூட குபீரென்று சிரிப்பை வரவழைக்கிறது. மேலும் படம் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலாக அண்ணாச்சியின் நடிப்பை பற்றிய விமர்சனங்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

troll-the legend
அதிலும் அண்ணாச்சியின் படத்தை சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியோடு இணைத்து வெளிவந்த அந்த மீம்ஸ் தற்போது இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதுபோக ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா தன்னுடைய படத்தை பார்த்துவிட்டு கொடுக்கும் ரியாக்ஷனும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

troll-the legend
காசு இருக்கிறதே என்று இப்படி கண்டபடி செலவு செய்து படத்தை வெளியிட்டுள்ள அண்ணாச்சி இனிமேலாவது இப்படி ஒரு ரிஸ்க்கை எடுக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் பட்டுத் துணியில் ஜட்டி தச்சு போட்டா இப்படித்தான் இருக்கும் என்று அண்ணாச்சியை ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

troll-the legend
அவ்வளவு பெரிய தொழிலதிபர் ஒரே ஒரு படம் எடுத்து இப்படி அசிங்கப்பட்டு விட்டாரே என்று அவருக்கு ஆதரவாகவும் சில கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தன்னை கலாய்ப்பார்கள் என்று தெரிந்தும் கூட துணிந்து படத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் அண்ணாச்சிக்கு ஒரு சிலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

troll-the legend
