47 வயதில் ரஜினியுடன் மல்லு கட்டிய கவர்ச்சி கன்னி.. காவாலாவுக்கு அப்போதே டஃப் கொடுத்த ஐட்டம் டான்சர்

Rajini : இப்போதெல்லாம் கவர்ச்சி நடனத்திற்கு ஏகப்பட்ட நடிகைகள் வந்து விட்டனர். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் எல்லாம் ஒரு சில நடிகைகள் தான் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள். அந்த வகையில் முதன் முதலில் குமாரன் குலோத்துங்கன் என்ற படத்தில் 1939 ஆம் ஆண்டு டி ஆர் ராஜகுமாரி கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் ஐட்டம் நடிகை ஆவார். இதற்கு அடுத்தபடியாக ஐட்டம் டான்ஸில் பட்டையை கிளப்பியவர் என்றால் ஜோதிலட்சுமி தான். இவர் வானம்பாடி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற யாரடி வந்தார் என்னடி சொன்னார் என்ற பாடலில் நடனமாடி மிகவும் பிரபலமானார்.

தன்னுடைய 47 வயதில் ரஜினியுடன் மல்லுக்கட்டி நடனமாடி இருப்பார். அதாவது முத்து படத்தில் கொக்கு சைவ கொக்கு என்ற படத்தில் சரியான குத்தாட்டம் போட்டிருப்பார். அதேபோல் இதற்கு அடுத்தபடியாக விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் கான கருங்குயிலே என்ற பாடல் இவரை மேலும் பிரபலமாக்கியது.

Also Read : ரஜினி வீட்டு பக்கத்துல குடி இருக்க முடியல, ஆவேசமான பெண்.. இது என்ன தலைவருக்கு வந்த சோதனை

அதன்பிறகு ஜோதிலட்சுமி கடைசியாக 2015 ஆம் ஆண்டு திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் நடித்து இருந்தார். தன்னுடைய 68வது வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோதிலட்சுமி உயிரிழந்தார். இப்போது சமந்தா, தமன்னா எல்லாம் ஒரு பாடலுக்கே கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

அப்போது குறைவான சம்பளம், இந்த அளவுக்கு பயிற்சியாளர்கள் இல்லாத போதும் தனது திறமையால் தனக்கான அடையாளத்தை ஜோதி லட்சுமி ஏற்படுத்தி கொண்டார். தமன்னாவின் காவாலா படத்திற்கு அப்போதே டஃப் கொடுக்கும் அளவில் ரஜினிக்கு ஈடு கொடுத்து ஜோதிலட்சுமி பட்டையை கிளப்பி இருந்தார்.

Also Read : ரஜினி ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள்.. நூறாவது படத்தில் தோற்றுப் போன தலைவர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்