மனோஜ் செய்த பித்தலாட்டம், ஆதாரத்தைக் கொண்டு வந்த முத்து.. விஜயா ஆடிய ஆட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஷோரூம் கடையில் 4 லட்சப் பணத்தை ஏமாந்து விட்டார். அதை எப்படி சரி கட்ட வேண்டும் என்று தெரியாமல் விஜயாவிடம் அழுது புலம்பி மீனாவின் நகையை அடகு வைப்பதற்கு வாங்கிட்டு போனார். ஆனால் அங்கே போனால் மனோஜ் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்காததால் அந்த நகையை விற்று விட்டார்.

இந்த சூழலில் மீனாவின் நகை அவருக்கு தேவைப்பட்டதால் முத்து அண்ணாமலையிடம் கேட்டார். அண்ணாமலை, விஜயாவிடம் சொல்லி மீனாவின் நகையை திருப்பிக் கொடுக்க சொன்னார். இதற்குள் மனோஜ் மற்றும் விஜயா பிளான் பண்ணி மீனாவின் அசல் நகையைப் போலவே, போலி நகையை கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள்.

ரோகிணிக்கு பதிலாக மனோஜ் மாட்டிய சம்பவம்

இது தெரியாத மீனா, முத்துவும் அந்த நகையை போட்டு பாட்டிக்கு வேறொரு நகையை வாங்குவதற்கு தங்க கடைக்கு கொண்டுட்டு போனார்கள். அங்க போய் பார்த்தால் தான் தெரியுது அது அத்தனையும் தங்கம் இல்லை பித்தளை என்று. பிறகு இப்பொழுது பாட்டின் எண்பதாவது பிறந்த நாள் வேற கொண்டாடும் சந்தோஷத்தில் அனைவரும் இருப்பார்கள்.

அந்த நேரத்தில் போய் நாம் சொன்னால் தேவையில்லாத பிரச்சினைகள் தான் வரும் அதனால் பொறுமையாக இருக்கலாம் என்று இருவரும் முடிவு எடுத்து விட்டார்கள். அதன்படி பாட்டியின் பிறந்த நாளும் நல்லபடியாக முடிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து முத்து கவரிங் நகையைக் கொண்டு வந்து அனைவரையும் நிற்க வைத்து இது தங்க நகை இல்லை என்ற உண்மையை சொல்லுகிறார்.

இதைப் பற்றி அண்ணாமலை, விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு அந்த வீணாப்போன விஜயா, எனக்கென்ன தெரியும் நீங்க கொடுத்த நகையை நான் அப்படி திருப்பிக் கொடுத்தேன். ஒருவேளை மீனா வீட்டில் தங்க நகை போட வக்கு இல்லாததால் கவரிங் நகை போட்டு அனுப்பி வைத்து நம்மளை ஏமாற்றி விட்டாரோ என்னமோ என்று மொத்த பழியையும் மீனா குடும்பத்தில் மனசாட்சி இல்லாமல் போட்டுவிட்டார்.

இதை கேட்டு ஆவேசமான மீனா, தேவையில்லாமல் என் குடும்பத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம். எங்க அம்மா போட்டது தங்க நகை தான் என்று வாதாடுகிறார். அப்பொழுது குறுக்கே புகுந்த ஸ்ருதி, நம்ம வேணா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார். இதை கேட்டதும் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன மாறி விஜயா மற்றும் மனோஜ் முழிக்கிறார்கள்.

ஆனால் முத்து அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று மனோஜ் நகைக்கடையில் போயி நகையை விற்று பணத்தை வாங்கிய ஆதாரத்தை கொண்டு வந்து நிரூபித்துக் காட்டுகிறார். கடைசியில் மனோஜ் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று அப்பட்டமாக தெரிய வந்துவிட்டது. இதற்கு உடந்தையாக இருந்து அனைத்தையும் செய்த விஜயாவும் கையும் களமாக மாட்டி விட்டார்.

இதுதான் சான்ஸ் என்று மீனா, மனோஜ் உங்களால சம்பாதிக்க முடியலன்னா அதுக்கு நான் தான் கிடைத்தன. என் நகையே நீங்கள் எப்படி வித்து பணமாக்கலாம் என்று கேள்வி கேட்க, அவமானத்தில் ரோகினி மனோஜ் நிற்கிறார்கள். விஜயா இத்தனை நாள் ஆட்டம் ஆடியதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக மீனா கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் விஜயாவுக்கு சவுக்கடியாக மாறுகிறது. இனி அண்ணாமலை எடுக்கப் போகும் முடிவு நிச்சயம் மனோஜ் விஜயாவுக்கு ஒரு தண்டனையாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -