பாட்டி மனதை கொள்ளை அடித்து மாடியில் ரூம் கட்டும் முத்து.. ரோகினி மூஞ்சில் கரியை பூசிய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டிக்கு பிடித்த கிப்டை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பாட்டி ஒரு சிறந்த பரிசு கொடுப்பதாக சொல்லி இருந்தார். அதற்காக ரோகிணி மனோஜ் எப்படியாவது பாட்டி கொடுக்கும் சிறந்த பரிசை வாங்கி விட வேண்டும் என்று நவரத்தின மாலை மற்றும் பாட்டிக்கு மேக்கப் போட்டு ஓவர் ஐஸ் வைத்து விட்டார்கள்.

இவர்களைத் தொடர்ந்து விஜயா வழக்கம்போல் பேராசை பட்டதனால் தோழியிடம் இருந்த பழைய டிவியை புதுசாக பரிசு கொடுப்பது போல் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுக்கிறார். அடுத்ததாக ரவி வித்தியாசமான முறையில் கேக் செய்து பாட்டியின் எண்பதாவது பிறந்தநாளுக்கு கேக் ரெடி பண்ணி கொண்டு வருகிறார். அதே மாதிரி சுருதியும் இந்த போட்டியில் நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டிக்கு பரிசு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்.

முத்துவுக்கு உதவிய பாட்டி

இவர்களை தொடர்ந்து சுருதி அம்மா, மீனா அம்மா, தங்கை மற்றும் அனைவரும் வந்து விட்டார்கள். இந்த நிலையில் மீனா, கழுத்தில் எந்தவித நகையும் போடாமல் இருப்பதால் பாட்டி, விஜயாவிடம் சொல்லி மீனாவின் நகையை திருப்பிக் கொடுக்க சொல்கிறார். அதற்கு விஜயா நான் நேற்று கொடுத்துவிட்டேன் என்று சொல்கிறார். அப்பொழுது பாட்டி, மீனாவிடம் அந்த நகையை அனைத்தையும் போட்டுட்டு வா என்று சொல்கிறார்.

உடனே மீனா அந்த கவரிங் நகை போட்டு வந்த பொழுது சுருதி அம்மா ஏன் கவரி நகை போட்டுட்டு வருகிறாய். தங்க நகை உன்னிடம் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு பாட்டி, மீனா போட்டிருப்பது தங்க நகை தான். மீனாவிடம் தங்க நகை இருக்கக் கூடாதா என்று சுருதி அம்மாவை திட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து அனைவரும் பாட்டி பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதற்கு தயாராகிய நிலையில் மனோஜ் பாட்டியை கூப்பிடுகிறார்.

ஆனால் பாட்டி என் பேரன் முத்து இல்லாமல் நான் கேக் வெட்ட மாட்டேன். முத்து வரட்டும் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ், அவன் இந்நேரம் எங்கு குடித்துவிட்டு தள்ளாடுகிறானோ, அவனுக்காக எல்லாம் நம் காத்திருக்க தேவையில்லை என்று சொல்கிறார். அப்பொழுது டே தொழிலதிபரே, நீ நினைப்பது எப்பொழுதும் நடக்காது நான் உன்ன மாதிரி கிடையாது என்று சொல்லி முத்து சரியான நேரத்தில் வந்துவிடுகிறார்.

உடனே அனைவரும் ஏன் இவ்வளவு நேரம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். அதற்கு முத்து ஒன்னும் பிரச்சினை இல்லை, கேக் வெட்டி பங்க்ஷன் ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார். அப்பொழுது தொடர்ந்து ஒவ்வொருவரும் அவருடைய கிப்ட் கொடுக்கும் பொழுது முத்து நான் ஒரு ஸ்பெஷல் கிப்ட் உங்களுக்காக வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

அப்படி என்ன கொடுக்கப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் பொழுது முத்துவின் நண்பர் பாட்டியின் சிறுவயது தோழிகளான வடிவுக்கரசி மற்றும் கே ஆர் விஜயாவை கூட்டிட்டு வருகிறார். இவர்களை பார்த்து சந்தோஷத்தில் பாட்டி ரொம்பவே பூரித்து போய்விட்டார். அத்துடன் அனைவரும் சந்தோஷமாக இருந்த நிலையில் பாட்டியின் பிறந்த நாள் முடிந்து விட்டது.

இதனை தொடர்ந்து பாட்டியின் மனதை கொள்ளையடித்தது முத்து தான் என்பதற்காக பாட்டி அவருக்கு சிறந்த பரிசை கொடுக்கப் போகிறார். அந்த வகையில் தற்போது முத்துவுக்கு என்ன தேவை என்று பார்க்கும் பொழுது மாடியில் ஒரு தனி ரூம் வேண்டும் என்பது தெரிந்து விட்டது. அதற்காக பாட்டி முத்துவிற்கு பணத்தை கொடுக்கிறார். ஆரம்பத்தில் வாங்க மறுத்தாலும் அண்ணாமலை மற்றும் பாட்டி அனைவரும் சொல்லிய நிலையில் முத்து பணத்தை வாங்கி மாடியில் ரூம் கட்டப் போகிறார்.

இதற்கிடையில் மீனா போட்டு இருக்கும் கவரிங் நகைக்கு காரணமான மனோஜ் மற்றும் விஜயா பற்றிய உண்மையை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. அப்பொழுது மனோஜ் அவமானப்பட்டு நிற்கும்பொழுது ரோகிணிக்கு இது பெரிய அசிங்கமாக போகப் போகிறது. ஓவராக ஆட்டம் ஆடிய ரோகினிக்கு மீனா கொடுக்கும் பதிலடியாக இருக்கப் போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -