செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

குணசேகரனை ஓரங்கட்ட போகும் எதிர்நீச்சல் டீம்.. மொத்த டிஆர்பியும் சொதப்பிய கொம்பேறி மூக்கன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது மிக சுவாரசியமான கேரக்டர்களை முன்னிறுத்தி காட்டி வருகிறது. அந்த வகையில் இதுவரை எடுபிடி வேலையை மட்டும் பார்த்து வந்த சக்திக்கும் ஆதிரைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

எப்படிடா பழைய மாதிரி மக்களிடம் வரவேற்பை பெறுவது என்று தவித்து வந்த எதிர்நீச்சல் டீமுக்கு தற்போது தொக்காக ஒரு விஷயம் மாட்டிக் கொண்டது. அதாவது குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து மக்களின் பேராதரவை பெற்றார். அதனாலேயே டிஆர்பி ரேட்ங்கில் சிம்ம சொப்பனமாக இடம் பிடித்தது.

ஆனால் இவருடைய மறைவிற்குப் பிறகு குணசேகரன் கதாபாத்திரத்துக்கு புதிதாக வந்த வேலராமமூர்த்தி கொஞ்சம் கூட செட்டாகவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருடைய மூர்க்கத்தனமான பேச்சும், கொடுமையான வார்த்தைகளும் காது கொடுத்து கூட கேட்க முடியவில்லை என்று பலரும் இந்த நாடகத்தை பார்ப்பதையே தவிர்த்து விட்டார்கள்.

Also read: கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க மனோஜ்.. வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய முத்து, திருட்டு முழி முழிக்கும் விஜயா

இருந்தாலும் மொத்த டீமும் இந்த நாடகத்தை தூக்கி நிறுத்துவதற்காக போராடி தவித்து வந்தார்கள். அப்படிப்பட்டவருக்கு தற்போது சக்தி கேரக்டர் கை கொடுத்து வருகிறது. அதாவது இவருடைய பேச்சு, நடிப்பு, எதார்த்தமான அன்பு அனைத்தும் பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் இவருடைய கதாபாத்திரத்தை இன்னும் அதிகரித்துக் காட்டினால் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்று மக்கள் கமெண்ட்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அதனாலேயே என்னமோ குணசேகரனை இனி ஓரங்கட்டி விட்டு சக்தி கேரக்டரை தூக்கி நிறுத்தலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் குணசேகரன், தற்போது கதிரை கூப்பிட்டு ஆதிரை கொடுத்த புகார் பேரில் நான் கொஞ்சம் நாட்களாக தலைமறைவாக இருக்க வேண்டும். அதனால் என்னை தேட வேண்டாம் என்று கூறுகிறார்.

இப்படி இவர் சொல்லியதை பார்க்கும் போது இவருடைய கேரக்டர் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஓரங்கட்டி விட்டாச்சு. இவர் வருவதற்குள் சக்தி மற்றும் ஆதிரையே வைத்து மெருகேற்றி விடனும் என்று கதையை திசை திருப்பி விட்டார்கள். ஆக மொத்தத்தில் மக்களின் பேவரைட் ஆன இந்த நாடகம் அவர்கள் எதிர்பார்த்தபடி கதை சூடு பிடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடும்.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சிங்கபெண்ணிடம் தோற்றுப் போன எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News