எப்போதுமே இந்த 7 பேருக்காக திறந்தே இருக்கும் ரஜினி வீட்டின் கதவு.. மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட விஜய்யின் அப்பா

Actor Rajini: ரஜினியை எந்த அளவுக்கு ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக மனதில் நினைத்துக் கொண்டாடி வருகிறார்களோ, அதே போல் சில பிரபலங்களும் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதில் சில நடிகர்கள் மானசீக குருவாகவே ஏற்றுக்கொண்டு இவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அப்படியே ஃபாலோ பண்ணிக்கொண்டு வருகிறார்கள்.

அந்த இடத்தில் முதலாவதாக இருப்பது நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் அம்பத்தூரில் ராகவேந்திரா கோயிலைக் கட்டி உள்ளார். அந்த சிலையை பார்ப்பதற்கு ரஜினி, ராகவேந்திரா படத்தில் காட்சி அளித்தது போலவே வடிவமைத்திருக்கிறார். அந்த அளவிற்கு மானசீக குருவாக முழு மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Also read: சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

அதே மாதிரி ரஜினியும் தன்னுடைய சிஷ்யனாக பாவித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மூச்சுக்கும் பேச்சுக்கும் ரஜினி தான் என்னுடைய குரு, வழிகாட்டி, பாசிட்டிவ் வைப்ரேஷன் என்று பேசிக்கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட இவருக்கு ரஜினியின் ஆசிர்வாதத்துடன் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அத்துடன் இவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தினால் எப்ப வேண்டுமென்றாலும் ரஜினியை பார்க்கலாம் என்ற வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதே மாதிரி இவரை போல் இன்னும் ஆறு பிரபலங்களுக்கு ரஜினியை சந்திப்பதில் எந்தவித இடையூறும் இன்றி அவருடைய வீட்டின் கதவு எப்பொழுதுமே திறந்திருக்கும்.

Also read: ஒரு காலத்தில் நிம்மதியை தொலைத்து பித்து பிடித்து அலைந்த ரஜினி.. வீட்டையே ரணகளமாக்கி சர்ச்சை

அதில் பல வருட காலமாக பாலிவுட்டில் சினேகிதம் வைத்திருக்கும் அமிதாப்பச்சன். அடுத்ததாக எவ்வளவு போட்டிகள் வந்தாலும் எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய நண்பராக தூக்கி வைத்துக் கொண்டாடும் கமலஹாசன். இவரைத் தொடர்ந்து மம்முட்டி, விஜய் சேதுபதி மற்றும் சிரஞ்சீவி இவர்களுக்கும் ரஜினி வீட்டின் கதவு எப்போதுமே திறந்திருக்கும்.

அடுத்ததாக விஜய்யின் அப்பாவாக நடித்த மோகன்லால், இவரும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். இவரும் ரஜினியை எப்பொழுது வேண்டுமென்றாலும் சந்திக்கலாம். அதற்கான வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார். இப்படி சில பிரபலங்களுக்கு மட்டும் ரஜினி பல சலுகைகளை கொடுத்து இவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்.

Also read: ஒரு காலத்தில் நிம்மதியை தொலைத்து பித்து பிடித்து அலைந்த ரஜினி.. வீட்டையே ரணகளமாக்கி சர்ச்சை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்