சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

36 வயதில் ஆஸ்கரை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய இயக்குனர்.. யானையை வைத்து இப்படியும் கதை சொல்ல முடியுமா?

மிக உயரிய மற்றும் பெருமை மிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு சினிமா கலைஞனின் கனவாக இருக்கிறது. அதை பெறுவதற்காக உலக அளவில் கடும் போட்டியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தியாவிலிருந்து இந்த விருதுக்காக ஆல் தட் ப்ரீத்ஸ் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆகிய இரு டாக்குமென்டரி படங்கள் நாமினேட் செய்யப்பட்டது. அதில் ஆவணப்பட பிரிவில் போட்டியிட்ட ஆல் தட் ப்ரீப்ஸ் படத்திற்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் குறும்பட பிரிவில் நாமினேட் செய்யப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி இருக்கிறது.

Also read: கருத்து கேட்டு கேட்டு நானே கருத்துட்டேன்.. அகிலன் படத்தை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான இந்த குறும்படத்தை 36 வயதான பெண் இயக்குனர் கார்திகி கன்சல்வாஸ் இயக்கியிருந்தார். சுமார் 39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. மேலும் அப்படம் யானைக்கும், மனிதனுக்கும் இருக்கும் ஒரு பாசப்பிணை காட்டும் படி எடுக்கப்பட்டிருந்தது.

அதாவது பழங்குடி தம்பதியினர் படுகாயம் அடைந்த ரகு என்ற யானை குட்டியை பராமரித்து பாதுகாப்பது பற்றிய கதைதான் இந்த குறும்படம். ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்த இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது இந்திய சினிமாவிற்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த டாக்குமென்டரி படம் தமிழ்நாட்டிற்கும் பெருமையை சேர்த்துள்ளது.

Also read: கடைசியாக அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. லியோவுக்கு பின் எடுக்க போகும் புது அவதாரம்

மேலும் முதுமலைக்கே இப்படி ஒரு விருது கிடைத்தது போன்று இருப்பதாக முதுமலை யானை பராமரிப்பாளர் பெல்லி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிலும் யானைகள் இல்லாமல் இப்படி ஒரு பெருமை கிடைத்திருக்காது. அந்த வகையில் யானைகள் தான் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

இப்படி பல பெருமைகளை சேர்த்த அந்த ஆவணப்படம் நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் தற்போது ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 36 வயதிலேயே இப்படி ஒரு சாதனையை படைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆஸ்கர் விருதை இயக்குனரும், தயாரிப்பாளரும் இணைந்து மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

Also read: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அருண் விஜய்.. வணங்கான் படப்பிடிப்பில் லீக்கான புகைப்படம்

- Advertisement -

Trending News