ஆடிஷனில் அந்தரங்க போஸ் கொடுக்க சொன்ன இயக்குனர்.. பத்திரகாளியாக மாறிய நடிகை

புதுமுக நடிகை என்றாலோ, வாய்ப்பு தேடும் நடிகை என்றாலோ அவர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயத்தை சிலர் சுலபமாக கேட்டு விடுகின்றனர். அதுவே முன்னணி நடிகையாக இருந்தால் டபுள் மீனிங் பேசுவது, காட்சிகளில் கவர்ச்சியை கூட்டுவது என தங்கள் சபல புத்தியை காட்டிவிடுகின்றனர்.

அப்படித்தான் டாப் நடிகையாக இருக்கும் ஒருவரிடம் இயக்குனர் தவறாக பேசியிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி பிஸியாக நடித்து வரும் அந்த நடிகை ஹாலிவுட் லெவலிலும் கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன போது ஹீரோவுடன் கொஞ்சம் நெருக்கமான காட்சி இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

Also read: பப்ளி நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த டாப் ஹீரோ.. தொந்தரவு தாங்காமல் அக்கட தேசம் ஓடிய ஹீரோயின்

நடிகையும் அதற்கு சம்மதித்து ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த நடிகையிடம் இயக்குனர் ஆடையை கழட்ட சொல்லி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை முடியாது என்று மறுத்திருக்கிறார். ஆனால் அந்த இயக்குனர் நீங்கள் உள்ளாடையுடன் நடித்தால் பிசினஸ் நன்றாக இருக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று கேவலமாக வழிந்திருக்கிறார்.

இருப்பினும் நடிகை அப்படி ஒரு போஸ் கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த இயக்குனர் உள்ளாடையை காட்டுங்கள் என்றும் இரட்டை அர்த்தத்துடன் பல மோசமான வார்த்தைகளையும் பேசி இருக்கிறார். இதனால் பத்ரகாளியான அந்த நடிகை இந்த பட வாய்ப்பே வேண்டாம் என்று வந்துவிட்டாராம்.

Also read: டாப் ஹீரோவை கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகை.. பொறாமையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய சேச்சி

அதன் பிறகு தயாரிப்பாளர் தரப்பு எவ்வளவு சமாதானப்படுத்தியும் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு ஒரு நடிகையை வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் எனக்கே இப்படி ஒரு நிலைமையா என்று அந்த ஹீரோயின் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தத்தோடு புலம்பி வருகிறாராம்.

- Advertisement -spot_img

Trending News