Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பதட்ட நிலையிலையே வைத்திருக்கும் வெற்றிமாறன்.. விடுதலை கிடைக்குமா? மீண்டும் வேதாளம் ஏறிய முருங்கை மரம்

வெற்றிமாறன் இடமிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்ற பதட்டத்தில் படக்குழு.

vetrimaaran-1

வெற்றிமாறன் படப்பிடிப்பில் என்ன செய்கிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கும். ஆனால் என்ன மாய, மந்திரம் செய்வாரோ தெரியாது திரையில் வேற லெவலில் வந்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அந்த அளவுக்கு தரமான படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். ஆனால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்தது. இந்த படத்தில் எடுத்த காட்சி திருப்திப்படவில்லை என மீண்டும் மீண்டும் வெற்றிமாறன் அதே காட்சியை எடுத்து வந்தார்.

Also Read : வெற்றிமாறன் படத்தில் அடம் பிடித்து நடித்த 5 இயக்குனர்கள்.. வட சென்னையில் மிரட்டி விட்ட ராஜன்

மேலும் இப்படத்தில் சூரி கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்திருந்தார். இதே கெட்டப்புடன் மற்ற படங்களில் சூரியால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் விடுதலை படத்திற்கு பிறகு தற்போது சூரிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் விடுதலை 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

விடுதலை படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளையும் எடுத்துவிட்டார். இந்த படத்தின் 80 சதவீத வேலைகள் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 20% காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருக்கிறது. இப்போது வெற்றிமாறன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வருகிறாராம்.

Also Read : வெற்றிமாறனின் ஆச்சரியமூட்டும் 5 அவதாரங்கள்.. வெப் சீரிஸ்க்கு கதை எழுதிய பொல்லாதவன்

விடுதலை 2 படத்திற்கு இன்னும் 20 நாள் சூட்டில் உள்ளது. அதற்காக வெற்றிமாறனுடன் படக்குழு கிளம்பியுள்ளது. ஆனால் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்திவிட்டு போதும் என்று வெற்றிமாறன் பேக்கப் சொல்லிவிட்டாராம். இப்போது அந்த ஐந்து நாட்கள் எடுத்த காட்சியை திரும்ப திரும்ப பார்த்து வருகிறாராம்.

முன்பு போல மீண்டும் அதே படப்பிடிப்பை எடுக்க சொல்லி நச்சரித்த வெற்றிமாறன், முருங்கை மரம் ஏறுவது போல இந்த காட்சிக்கு ஓகே சொல்லுவாரா அல்லது மீண்டும் படப்பிடிப்பு எடுப்பாரா என பதட்டத்தில் படக்குழு உள்ளது. மேலும் வெற்றிமாறன் இடமிருந்து எப்போது தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் படக்குழு உள்ளது.

Also Read : கிட்டத்தட்ட 70% முடிந்த 5 இரண்டாம் பாகம் படங்கள்.. தெறிக்கவிடும் வெற்றிமாறன் குமரேசன் கூட்டணி

Continue Reading
To Top