புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆடியன்ஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறும் டம்மி பீஸ்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முழுவதும் கூச்சலும், சண்டையுமாக நகர்ந்தது. அதிலும் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு காட்டுவாசி, ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சண்டை முற்றி போய் இருந்த பிக் பாஸ் வீடு இந்த டாஸ்க்கால் இன்னும் மோசமானது.

கொஞ்சம் கூட ரசிகர்களை கவரும் வகையில் எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் இந்த சீசன் போட்டியாளர்கள் பார்ப்பவர்களை தொடர்ந்து கோபப்படுத்தி வருகின்றனர். அதிலும் நேற்று சிவின் மற்றும் தனலட்சுமி இருவருக்கும் இடையே நடந்த மோதல் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

Also read: தனலட்சுமிக்கு போட்டியாக வரும் அடுத்த சோசியல் மீடியா பிரபலம்.. பிக் பாஸில் களமிறங்கும் வைல்டு கார்டு என்ட்ரி

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு குயின்சி வெளியேற இருக்கிறார். கதிரவன், ரட்சிதா, மைனா நந்தினி, தனலட்சுமி, ஜனனி, குயின்சி ஆகியோர் நாமினேஷனில் இருந்த நிலையில் தற்போது குயின்சிக்கு தான் குறைந்த ஓட்டு கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் மிச்சர் தின்னும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

கண்ணுக்கு முன் எவ்வளவு பெரிய அடிதடி நடந்தாலும் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் குயின்சி கதிரவனுடன் பேசி சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் இதுவரை செய்யவில்லை. அப்படி பார்த்தால் இவர் எப்படி 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Also read: மயிரிழையில் உயிர் தப்பிய வாயாடி தனம்.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் வசமாக சிக்கிய குயின்சியை ஆடியன்ஸ் ஸ்கெட்ச் போட்டு வீட்டை விட்டு அனுப்பி இருக்கின்றனர். இவரை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் ராமும் வெளியேற வேண்டும் என்று மக்கள் இப்போதே கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இன்று வார இறுதி நாள் என்பதால் ஆண்டவரின் தரிசனத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அதிக மன உளைச்சலை உருவாக்கிய இந்த வார எபிசோட் பற்றி கமல் தன்னுடைய பாணியில் போட்டியாளர்களை வறுத்தெடுப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

Also read: இந்த வாரம் நாமினேட்டான 6 நபர்கள்.. ஒரே போட்டியாளரை கட்டம் கட்டி தூக்கிய பிக் பாஸ் வீடு

- Advertisement -

Trending News