காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!

tamil-serial-actress-gossip
tamil-serial-actress-gossip

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலை தற்போது இருக்கிறது. அதில் சிலர் வாய்ப்புக்காக அதற்கு சம்மதித்தாலும் உண்மையில் பண தேவை தான் அதற்கு காரணமாக இருக்கிறது.

அதிலும் சில அம்மாக்களே மகள்களை பணத்திற்காக நடிகை என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தி வருவது அதிர்ச்சியை கொடுக்கிறது. இது குறித்து நாம் எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் நிஜ வாழ்விலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேற தான் செய்கிறது.

Also read: காதல் தோல்வி, தற்கொலை முயற்சியில் வாரிசு நடிகை.. 37 வயதாகியும் திருமணத்தை வெறுக்கும் சோகம்

அப்படி ஒரு விஷயம் தான் வளர்ந்து வரும் ஒரு நடிகைக்கு ஏற்பட்டிருக்கிறது. நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்கு வந்த புதுமுக நடிகை ஒருவர் தன் அம்மாவினால் படாத பாடு பட்டிருக்கிறார். பகல் முழுவதும் ஷூட்டிங்கில் நடித்துவிட்டு வரும் மகளை இரவு முழுவதும் இயக்குனர், தயாரிப்பாளர் என்று பலரிடம் அவரின் அம்மா அனுப்புவாராம்.

முடியாது என்று கெஞ்சினாலும் பணத்துக்காக பெற்ற தாயே இப்படி ஒரு கொடுமையை நடத்தி இருக்கிறார். இந்த விஷயத்தை 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த சா நடிகை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Also read: கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை

இப்படி அம்மாவால் சித்திரவதை செய்யப்பட்ட அந்த நடிகைக்கு அவர் பாதுகாப்பும் கொடுத்தாராம். இரவு நேரத்தில் அம்மாவிடம் இருந்து தப்பித்து வரும் அந்த நடிகையை இவர் தன்னுடைய ரூமில் தங்க வைத்துக் கொள்வாராம். இதுபோன்று இன்னும் சில பெண்களையும் அவர் காப்பாற்றி இருக்கிறாராம்.

இந்த செய்தி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அம்மாவே இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். அந்த அளவுக்கு பணத்தாசை பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

Also read: விவாகரத்து லிஸ்டில் இணைந்த பிரபல தொகுப்பாளினி.. எல்லாம் சேனலோட ராசி, ஐயோ போச்சே!

Advertisement Amazon Prime Banner