துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. 11 வருடம் கழித்து தளபதி 67ல் விட்டதைப் பிடித்த நடிகை

வாரிசு படத்திற்கு பின் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படத்தை குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் யாரும் எதிர்பாராத நடிகை ஒருவர் தளபதி 67 படத்தில் இணைந்திருக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த நடிகை ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு சென்றுவிட்டது. அதன்பின் இப்போதுதான் மறுபடியும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நடிகை பிரியா ஆனந்த் பெற்று இருக்கிறார்.

Also Read: அமெரிக்கா வரை விஜய் பெயரை பங்கம் பண்ணும் நெப்போலியன்.. தேரை இழுத்து தெருவுல விட்ட சம்பவம்

இந்த விஷயத்தை தற்போது தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். 11 வருடத்திற்கு முன் கைநழுவி சென்ற வாய்ப்பு தற்போது மீண்டும் பிரியா ஆனந்துக்கு கிடைத்திருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். இவர் மட்டுமல்ல இந்த படத்தில் திரிஷாவும் நடிக்கிறார்.

இவ்வளவு நாள் தளபதி 67 படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பிற்காக படக்குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் விரைந்துள்ளது. இந்த விமானத்தில் பிரியா ஆனந்த், திரிஷா, சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம் பெற்று இருப்பதால் தளபதி 67 இல் அவர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Also Read: பினாமியை வைத்து சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் தந்திரம்.. விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மும்பை கேங்ஸ்டர் ஆக விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க உள்ளது. ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே தளபதி 67 படம் 500 கோடி ப்ரீ சேல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கில்லி படத்திற்கு பிறகு விஜய் உடன் திரிஷா நீண்ட வருடங்களுக்கு இணைவதும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது. அதேபோல் முதன்முதலாக விஜய் உடன் இணையும் பிரியா ஆனந்துக்கு, இந்த படம் அவருக்கு அடித்த ஜாக்பாட் போலவே நினைக்கிறாராம்.

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

thalapathy-67-priya-ananth-cinemapettai
thalapathy-67-priya-ananth-cinemapettai

Also Read: வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ