புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சூட்டிங் ஸ்பாட்டில் ராஜ்கிரணை அப்பா போல் தாங்கும் நடிகர்.. நீங்களே அதை சொன்னாலும் நம்புற மாதிரி இல்ல!

ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக மிரட்டி வந்த ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டத்து அரசன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார்.

இதற்கான பிரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. அவ்வாறு ஒரு ஊடகத்துக்கு ராஜ்கிரண் பேட்டி அளித்திருந்தார். இதில் இயக்குனர் சற்குணம் ஏற்கனவே தனுஷின் நையாண்டி படத்தை இயக்கியுள்ளார். மேலும் ராஜ்கிரணிடம் தனுஷை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

Also Read : ஹீரோவை விட ராஜ்கிரண் பெயர் வாங்கிய 5 படங்கள்.. முத்தையாவாக பந்தாடிய கொம்பன்

இப்போது தனுஷின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது. அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அந்த பேட்டியில் ராஜ்கிரண் தனுஷை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

அதாவது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நிறைய படங்களில் நடித்துள்ளார். இதனால் தனுஷை நான்கு வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். ஆகையால் சிறுவயதிலிருந்தே தனுஷ் என்னை மாமா என்று தான் அழைப்பார். இதனால் தான் தனுஷ் இயக்கிய படத்தில் என்னை கதாநாயகனாக போட்டார்.

Also Read : டிஆர்பிக்காக ராஜ்கிரண் வைத்தெரிச்சலை கொட்டிய பிரபல சேனல்.. விஜய் டிவியை மிஞ்சுடுவாங்க போலயே

மேலும் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. பவர் பாண்டி படப்பிடிப்பு தளத்தில் புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒழுங்காக கூட பிடிக்க விட மாட்டார்கள். அதற்குள் ஷாட் ரெடி என்று கூப்பிடுவார்கள். இதை ஒரு முறை தனுஷ் பார்த்துவிட்டு ஐயா புகைபிடிக்கும் போது அழைக்க வேண்டாம், சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பை தொடங்கலாம் என்று சொல்வாராம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பில் பரபரப்பாக வேலை செய்யும்போது சிலர் தன்னை உரசி விட்டால் அதைப் பார்த்து தனுஷ், ஐயா நின்று கொண்டிருப்பது கூட தெரியாதா என உரசிய நபரை திட்டுவாராம். இவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் அப்பா போல என்னை தாங்குவார் என ராஜ்கிரண் கூறியுள்ளார். ஆனால் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் யாரையுமே மதிக்க மாட்டார் என்று தான் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : தனுஷ்க்கு மட்டும் தான் நோ.. விஜய் சேதுபதி படம்னா டபுள் ஓகே சொல்லும் பாலிவுட் வாரிசு நடிகை

- Advertisement -

Trending News