நேரடியாக தெலுங்கில் கால் வைத்த விஜய்.. அட்வான்ஸ் கொடுத்த இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

விஜய்யின் கடந்த சில வருடங்களில் அவரது படங்களில் சினிமா வியாபாரம் உச்சத்தை தொட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். என்னதான் சமூகவலைதளத்தில் விஜய்யை மட்டம் தட்டிப் பேசினாலும் உண்மை இதுதான்.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்ததாக சென்னையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

தளபதி 65 படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது விஜய் அந்த நிறுவனத்துடன் படம் செய்ய தயங்கி வருகிறாராம்.

அதற்கு காரணம் விஜய்யின் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நேரடியாக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் விஜய்யை சந்தித்து கால்சீட் பெற்றுள்ளதாக தெலுங்கில் முன்னணி பத்திரிக்கை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் மகரிஷி, தோழா போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லி என்பவரின் இயக்கத்தில் தளபதி 67 படமும் அடுத்தடுத்து உருவாக உள்ளதாம். இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸுக்கு எப்படி பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்ததோ அதே போல் பிகில் படத்திற்கு பிறகு விஜய்க்கு இந்திய அளவில் ஒரு குறிப்பிட்ட மார்க்கெட் ஏற்பட்டுள்ளதால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளார் தளபதி.

vijay-thalapathy65-cinemapettai
vijay-thalapathy65-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்