விஜயகாந்தை ரோல் மாடலாய் எடுக்கும் தளபதி.. விஜய்யின் அரசியல் புதிய கருத்துக்கணிப்பு

Actor Vijay: தன் நடிப்பால் கோடானக்கோடி ரசிகர்களை கொண்டவர் தான் விஜய். இவர் சமீப காலமாக அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் விஜயகாந்தை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு செயல்படும் செயல்களை குறித்த தகவலை இங்கு காண்போம்.

இவரின் அடுத்த கட்ட படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஊட்டம் வகையில் தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் முழுமையாக இவர் வரும் தேர்தலில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.

Also Read: சாமியாருடன் அந்தரங்க தொடர்பில் இருந்ததால் கணவரை கழட்டி விட்ட நடிகை.. கூட நடித்த நடிகரையும் விட்டு வைக்கல

இதற்கு முன்னேற்பாடாய் இவர் செய்து வரும் தொண்டுகள், நிகழ்ச்சிகள் பெரிதளவு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. மேலும் மாணவர்களின் நலன் கருதி இவர் செய்து வரும் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

அவ்வாறு இருக்கையில் இவர் அரசியல் வந்தால் எப்படி இருக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் இளைஞர்கள் அதிகமாக களம் இறங்கப்படுவார்கள் என்ற பேச்சும் எழத் தொடங்கிவிட்டது. இதனால் விஜய்க்கு, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு சுமார் 8 முதல் 10 சதவீதம் வாக்குகள் கண்டிப்பாக கிடைத்துவிடும்.

Also Read: நடிகர்களின் வலையில் சிக்கி கொள்ளாமல் தப்பித்த நடிகை.. கமல் ரஜினியுடன் நடிப்பதற்கு அறவே மறுத்துவிட்ட நாயகி

ஆனால் விஜய்க்கு அனைத்து பகுதிகளிலும் 4 சதவீத வாக்குகள் நிரந்தரமாக இருக்கின்றன. இந்நிலை மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் செய்து வரும் செயல்களை குறித்து வாக்கு சதவீதம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவரின் முயற்சி அனைத்தும், ஒரு கூட்டணியில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் ஆனால் அதை விட்டுவிட்டு தனித்து நின்று முதலமைச்சராவது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கையில் இவர் நம் கேப்டனை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவருக்கு கிடைத்த வெகுமதி போல், தானும் சாதிக்கலாம் என நம்பி வருகிறார். மேலும் விஜயகாந்த் ஆரம்ப காலத்திலேயே வளர்ந்து வந்து அவருக்கென்று 10 சதவீத ஓட்டு வாங்கி வைத்தார். அந்தக் கணிப்பில் விஜய்யும் செயல்படுகிறாரரோ என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

Also Read: கவுண்டமணியால் கேரியரை தொலைத்த 5 நடிகைகள்.. சப்பி போட்ட மாங்கொட்டையாய் தூக்கி எறிந்த காமெடி கிங்

- Advertisement -spot_img

Trending News