நடிகர்களின் வலையில் சிக்கி கொள்ளாமல் தப்பித்த நடிகை.. கமல் ரஜினியுடன் நடிப்பதற்கு அறவே மறுத்துவிட்ட நாயகி

Actor Rajini and Kamal: பொதுவாக சில நடிகைகளின் நடிப்பை பார்க்கும் பொழுது படத்துக்காக இந்த மாதிரியெல்லாம் நடிக்கணுமா என்று கண்ணை மூடிக்கொள்ளும் அளவிற்கு கவர்ச்சி என்ற பெயரில் கண் கூசும் அளவிற்கு நடிக்கிறார்கள். இந்த காரணங்களாலேயே இயக்குனர்கள், முக்கால்வாசி தமிழ் பேசும் நடிகைகளாக இல்லாமல் பாலிவுட் மற்றும் மற்ற மொழிகளில் இருந்து தான் இறக்குவார்கள்.

ஏனென்றால் அவர்கள் தான் எப்படி வேண்டுமானாலும், என்ன சொன்னாலும் அதற்கேற்ற மாதிரி நடித்துக் கொடுப்பார்கள். அதிலும் ஒரு சில நடிகைகளை குறிவைத்து பல நடிகர்கள் காதல் வலை விரித்து அவர்களை சிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு பயந்து பெரும்பாலானவர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார்கள். அப்படியே மீறி வந்த நடிகைகளிடம் ஆசை வார்த்தை காட்டி மோசம் பண்ணி விடுவார்கள்.

Also read: ரஜினி, கமல் படங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது.. சாய் பல்லவி போல் தெரிந்து ஓடும் 5 ஹீரோயின்கள்

ஆனால் இந்த விஷயத்தில் சில நடிகைகள் தப்பித்து இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு கைவிட்டு எண்ணக்கூடிய நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் தான் சாவித்திரி, தேவிகா, பத்மினி போன்ற அந்த காலத்தில் நடிகைகள். அதேபோல 90களில் உள்ள ஒரு நடிகை இவர்களின் லிஸ்டில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த நடிகை வேறு யாரும் இல்லை பார்த்ததுமே கையெடுத்து கும்பிடணும் என்று தோணும் நாயகி தான் சுவலட்சுமி.

இவர் தமிழில் ஆசை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து கனவு கன்னியாகவும் மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் எந்த காரணத்துக்காகவும் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று அறவே மறுத்து விட்டார். இதனால் இவரை தேடி வந்த பட வாய்ப்பு அனைத்தையும் மிஸ் பண்ணி இருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நான் இப்படித்தான் என்று கட்டுக்கோப்பாக நடித்திருக்கிறார். அதனாலேயே பட வாய்ப்பு இல்லாமல் குறைவான படங்களில் மட்டும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். முக்கால்வாசி இவருடைய படங்களில் சேலை கட்டிக்கொண்டு தான் நடித்திருக்கிறார். இவரை எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இவருடைய முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்.

முக்கியமாக கமல் மற்றும் ரஜினி படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்திருக்கிறார். ஏனென்றால் அந்த படங்களில் அவர்கள் சொல்வது போல தான் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் அதற்கு இடம் கொடுக்காமல் உஷாராகி மறுத்திருக்கிறார். இதுவரை எந்த நடிகர்கள் வலையிலும் சிக்காமல் தப்பித்துக் கொண்ட ஒரே நடிகை சுவலட்சுமி மட்டும் தான்.

Also read: 90களில் கொடி கட்டி பறந்து திடீரென காணாமல் போன 5 நடிகைகள்.. சுவடே தெரியாமல் போன சுவலட்சுமி

- Advertisement -