60-70களில் பயந்து நடுங்கிய 6 த்ரில்லர் படங்கள்.. இப்ப கூட தனியா பார்க்க முடியாது!

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் படங்கள் சில நம்மை ஆச்சரியத்தையும், பயத்தையும் அடையச் செய்கிறது. ஆனால் 60, 70 களிலேயே சில படங்களின் மூலம் ரசிகர்களை பயத்தில் நடுங்கச் செய்துள்ளார்கள் சில இயக்குனர்கள். அவ்வாறு நம்மை உச்சகட்ட பயத்தில் ஆழ்த்திய 6 தமிழ் த்ரில்லர் படங்களை பார்க்கலாம்.

அந்த நாள்: எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜிகணேசன், பண்டரிபாய் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்த நாள். இப்படத்தை ஏவிஎம் புரொடக்ஷன் தயாரித்திருந்தது. இப்படம் இரண்டாம் உலகப் போரின் சூழலில் அமைக்கப்பட்ட கதை, ஒரு வானொலி பொறியியலாளர் ராஜன் கொல்லப்படுவதை பற்றி எடுக்கப்பட்டிருந்தது.

அதே கண்கள்: ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அதே கண்கள். இப்படத்தை ஏவிஎம் புரோடக்சன் தயாரித்திருந்தது. இப்படத்தின் ஆரம்பம் முதலே சஸ்பென்ஸ்களுடனும், ட்விஸ்ட் உடனும் செல்லும். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சாந்தி நிலையம்: ஜிஎஸ் மணி இயக்கத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாந்தி நிலையம். இப்படம் பிரபல ஆங்கில பெண் நாவலாசிரியர் சார்லெட் ப்ராண்ட் எழுதிய ஜெனி எரி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. சாந்தி நிலையம் படத்தின் மூலம்தான் எஸ்பிபி சினிமாவில் அறிமுகமானார்.

நெஞ்சம் மறப்பதில்லை: ஸ்ரீதர் இயக்கத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நடு இரவில்: எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் மேஜர் சுந்தர்ராஜன், பண்டரிபாய், சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நடு இரவில். இப்படத்தில் பெரிய பங்களாவில் நடக்கும் ஒரு கொலையை தொடர்ந்து தொடர்கதையாய் பல கொலைகள் நடக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் திகில் படமாக வெளியான நடுஇரவில் படம் மிகப்பெரிய ஹிட்டானது.

புதிய பறவை: தாதா மிராசி இயக்கத்தில் சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி, எம் ஆர் ராதா, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புதிய பறவை. இப்படம் காதலும், திரில்லரும் கலந்த கதை. தான் கொலை செய்த மனைவி மீண்டும்அந்த நாள் வந்தால் கணவனின் நிலை என்பதை கருவாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்