6 ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்த படங்கள்.. ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த எஸ் எம் எஸ்

Heros Re-entry Movies: எப்போதுமே ஒருவரால் பீக்கில் இருக்க முடியாது. சில நேரம் மேலே, கீழே போன்ற சரிவுகளை சந்தித்து வருவார்கள். அப்படி தொடக்கத்தில் அமோக வரவேற்பு பெற்று, சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் மூலம் வெற்றியை கொடுத்த படங்களை பார்க்கலாம்.

விஷ்ணு விஷால்: வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். முதல் படத்திலே சிறந்த கதாநாயகன் விருதும் வாங்கினார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அது எதுவும் இவருக்கு பெரிதாக வெற்றி படமாக அமையவில்லை. நடிகரில் இருந்து தயாரிப்பாளராகவும் மாறி பார்த்தார், எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை. பிறகு 2017 இல் வெளியான ராட்சசன் திரைப்படதின் மூலம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆகியது.

Also Read:நாங்க எடுத்த ஒரு படம் கூட பிளாப் இல்ல, கெத்தாக காலரை தூக்கி விடும் 4 இயக்குனர்கள்.. குருவை மிஞ்சிய சிஷ்யன்

ஜீவா: ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற திரைப்படங்களின் மூலம் 2000 களின் தொடக்கத்தில் பயங்கர வைரலாக இருந்த நடிகர் தான் ஜீவா. பிறகு சில வருடங்களிலேயே காணாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. அந்த சமயத்தில் ராஜேஷ் இயக்கத்தில் 2009இல் வெளியான “சிவா மனசுல சக்தி” என்ற திரைப்படம் பயங்கர ரீச் ஆனது. இவருக்கு மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

சிம்பு: ஆரம்ப காலகட்டத்தில் காதல் அழிவதில்லை, கோவில் போன்ற திரைப்படங்கள் மூலம் பீக்கிலிருந்தவர் தான் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து 2015 வரை நல்ல படங்கள் நடித்து அமோக வரவேற்புடன் இருந்தார். பின்னர் இவரின் கேரியர் டவுன் ஆக தொடங்கியது, இவர் நடித்த படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்காமல் போனது. அந்த சமயத்தில் இவருக்கு ரி என்ட்ரி திரைப்படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 வெளியான மாநாடு திரைப்படம் அமைந்தது.

Also Read:ஏஆர் ரகுமான் போல் என்னால் அசிங்கப்பட முடியாது.. லோகேஷுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்

அரவிந்த்சாமி: 90களில் இருந்து முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருந்தவர்தான் அரவிந்த்சாமி. இவர் 2000 வரை நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு இணையாக இருக்கும் நடிகர்களே பயப்படும் அளவிற்கு இருந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்தார். பிறகு 2015 இல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் குடுத்தார்.

மாதவன்: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மேடி. இவர் பல பேரின் கனவு கண்ணனாகவே இருந்தவர். 2000 களின் தொடக்கத்தில் அமோக வரவேற்பு கொடுத்த அலைபாயுதே, மின்னலே போன்ற திரைப்படங்களின் மூலம் பயங்கர பேமஸ் ஆக இருந்தார். பிறகு 2010 க்கு மேல் தேடும் அளவிற்கு பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 2016ல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தடத்தை பதித்தார்.

Also Read:பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவன் கூட சேராததற்கு காரணம்.. மிஷ்கினால் மனநலம் பாதிக்கப்பட்ட விஷால்

அருண் விஜய்: பல வருடங்களாக சினிமாவில் இருந்தும், அருண் விஜய்க்கு வெற்றி எட்டா கனியாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கு, தவம், வேதா போன்று தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும், போதிய அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015இல் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம், திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்ற மாதிரி விக்டர் மனோகரன் ஆக மாசாக என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -spot_img

Trending News