பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவன் கூட சேராததற்கு காரணம்.. மிஷ்கினால் மனநலம் பாதிக்கப்பட்ட விஷால்

Vishal-Mysskin: எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்துக்குள் இருக்கும் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த சில தோல்விகளுக்கு பிறகு இப்படத்தை பெரிதும் நம்பும் அவர் தற்போது மிஷ்கினால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நண்பர்களாக இருந்த இவர்கள் தற்போது மிகப்பெரும் கருத்து வேறுபாடின் காரணமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு பிரிந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த துப்பறிவாளன் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

ஆனால் பாதி சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே மிஷ்கின் அதிலிருந்து விலகினார். மேலும் விஷாலே அப்படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்தார். அதிலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

அதில் மிஷ்கின் மட்டும் விஷால் என் தம்பி மாதிரி என்று அவ்வப்போது சமாதான பேச்சுக்களை மேடையில் பேசி வந்தார். ஆனால் விஷால் பல கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அவருடன் இணைய மாட்டேன் என்று தற்போது தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இருக்கிறாராம்.

Also read: அம்புட்டு காசுக்கும் கணக்கு காட்ட சொன்ன உயர்நீதிமன்றம்.. கடும் எச்சரிக்கையால் டப்பா டான்ஸ் ஆடிய விஷால்

அதாவது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. அதை தொடர்ந்து விஷால் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பிளாட்ஃபார்மில் தனியாக நின்றேன் என தெரிவித்துள்ளார்.

அதை என் வாழ்நாளில் எப்போதுமே மறக்க மாட்டேன். அதனால் இனி அவருடன் இணையலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தாமதமாகி கொண்டே வரும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

Also read: ஒட்டுமொத்த ஈகோவால் நாசமாய் போகும் நடிகர் சங்கம்.. விஷால் போட்ட தப்பு கணக்கு

- Advertisement -