Tamil Cinema News | சினிமா செய்திகள்
40 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் சிம்பு.. விரக்தியில் பேரனை வைத்து பக்கா பிளான் போட்ட டி ராஜேந்தர்
தற்போது அவருக்கு 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் திருமணமே வேண்டாம் என்று சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பிறந்ததிலிருந்தே சிம்பு நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஒரு வயது ஆகும் போதே அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய டி ராஜேந்தர் அதைத்தொடர்ந்து தன் மகனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு ஹீரோவாகவும் உருவாக்கினார். அந்த வகையில் அவர் சிம்புவை தமிழ் சினிமாவிற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி சினிமாவுக்காகவே உருவாக்கப்பட்டதாலோ என்னவோ சிம்பு இப்போது வரை நடிப்புதான் முக்கியம் என்ற ரேஞ்சில் நடந்து கொள்கிறார். அதாவது தற்போது அவருக்கு 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் திருமணமே வேண்டாம் என்று சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
Also rad: கமலஹாசனிடமே ஆழம் பார்த்த சிம்பு.. தலையில் அடித்து உட்கார வைத்த உலகநாயகன்
அவருடைய தம்பி, தங்கைக்கு கூட திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் இவர் திருமணம் என்ற ஒரு நினைப்பே இல்லாமல் இருக்கிறார். டி ராஜேந்தரும், அவருடைய மனைவியும் கூட இவருக்கு சொந்தக்கார பெண், தொழிலதிபர் மகள் என பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சிம்பு எதற்குமே பிடி கொடுக்காமல் ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறார்.
இந்த கவலையிலேயே டி ராஜேந்தருக்கு உடல் நலம் கூட பாதிக்கப்பட்டது. அப்போது சிம்பு, தன் அப்பாவின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டது டி ராஜேந்தரை ரொம்பவும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது. அதை வைத்தே திருமண பேச்சையும் எடுத்து பார்த்தார். ஆனாலும் அவர் மசியவில்லை. இதனால் கடுப்பான டி ராஜேந்தர் தற்போது தன் பேரனை கவனிக்க சென்று விட்டாராம்.
Also rad: சிம்பு, கௌதம் மேனன் இடையே பிரச்சனைக்கு இதுதான் காரணம்.. VTV2-க்கு வாய்ப்பு இருக்கா?
அதாவது சிம்புவே மனம் மாறி நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் தான் உண்டு என புரிந்து கொண்ட டி ராஜேந்தர் தன் மகள் வயிற்று பேரனை சினிமாவிற்காக உருவாக்க பிளான் போட்டு இருக்கிறாராம். அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது சிம்புவின் தங்கை இலக்கியாவின் மகனுக்கு டி ராஜேந்தர் இசை, நடனம், நடிப்பு போன்ற அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.
அது மட்டுமல்லாமல் தன் பேரனுக்காக ஒரு கதையை எழுதி இருக்கும் டி ராஜேந்தர் அதை விரைவில் படமாக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். மேலும் அதற்கான செட் போடும் வேலைகளை கூட தன்னுடைய ஸ்டைலில் ஆரம்பித்து விட்டாராம். அந்த வகையில் சிம்புவிற்கு திருமணம் செய்து அவருடைய பிள்ளையை பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தில் மகள் வயிற்று பேரனை வளர்த்து விடும் முயற்சியில் டி ராஜேந்தர் இறங்கியுள்ளார்.
Also rad: காலேஜ் பையனாக மாறிய சிம்பு.. வைரலாகும் நியூ லுக் போட்டோஸ்
