ஜெயிக்க முடியாமல் தடுமாறும் சூர்யா.. தொடர்ந்து இத்தனை தோல்வி படங்களா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. ஆரம்பத்தில் இவரது படங்கள் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தன்னுடைய கடின உழைப்பால் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இவரது நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தின் மூலம் முதல் சரிதை சந்தித்தார்.

மாஸ் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட சூர்யாவிற்கு இப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகின்றனர்.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யா இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டால் வெற்றி பெறலாம் என நினைத்தார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் சூர்யா தன் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருவதால் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்ததால் இனி சூர்யாவின் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் ஜெயிக்க முடியாது என பலரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சூர்யா இனிமேல் திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதை விட ஓடிடியில் வெளியிட்டால் நல்லது. இதனால் தயாரிப்பாளர்கள் தப்பித்துக் கொள்வார்கள் எனவும் கிண்டலாகப் பேசி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளில் தொடர்ந்து 8 தோல்விப் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ எனவும் சூர்யாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்