தன்னை தூக்கிவிட்டவருக்கு வாய்ப்பு கொடுத்த சூர்யா.. அடுத்தடுத்து 5 படங்கள்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக நடிப்பைத்தவிர்த்து தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று உட்பட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய 4 படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளதென சமீபத்தில் சூர்யா அறிவித்திருந்தார்.

bala-cinemapettai
bala-cinemapettai

ஆரம்பத்தில் ஹிட் கொடுக்க தடுமாறி வந்த சூர்யாவை “நந்தா” படத்தில் மாஸ் ஹீரோவாக காட்டி அந்த படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்தார் பாலா. அதன்பின் பாலாவின் பிதாமகன் படத்திலும் நடித்திருந்தார் சூர்யா.

சமீபகாலமாக பாலாவின் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்