அட இந்த விஷயத்துல லியோ ஜெயிச்சிட்டாரு.. சன் பிக்சர்ஸ் செய்த வேலையால் தலைவலியில் ரஜினி

Thalapathy Vijay – Rajinikanth: சில நேரத்துல நம்ம யோசிக்காம செய்ற விஷயம் அவ்வளவு நாள் சேர்த்து வச்ச மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதற்கு சன் பிக்சர்ஸ் நேத்து செய்த சம்பவம் சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது. எங்க கடமையை நாங்கள் செய்ரோம் என்ற பெயரில இவங்க பண்ண வேலையால் ரஜினி செம டென்ஷனில் இருக்கிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை அடைய, பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு தலைகால் புரியவில்லை. நேற்று முந்தைய தினம் சக்சஸ் மீட் முடிந்த கையோடு, நேற்று படத்தின் முக்கிய கேரக்டர் ஆன வர்மன் தீம் மியூசிக்கை வெளியிட்டிருந்தது. கடைசியில் இது நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக முடிந்து இருக்கிறது.

Also Read:ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்

ஜெயிலர் சக்சஸ் மீட் விழாவில் ரஜினிகாந்த் படத்தின் வில்லனான வர்மன் கேரக்டரை பற்றி பயங்கரமாக புகழ்ந்து பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலாகும் நேரத்தில், தீம் மியூசிக்கை வெளியிட்டால் வேற லெவலில் ரீச் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நினைத்தது. ஆனால் நெட்டிசன்கள் இப்போது காரி துப்பாத குறையாக கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று விடிந்ததும் எல்லோருடைய தலையிலும் இடியை இறக்கியது போல் வந்த அதிர்ச்சி செய்தி தான் விஜய் ஆண்டனியின் இரண்டாவது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. திரையுலகத்தை சேர்ந்த அத்தனை பிரபலங்களும் மீராவின் மறைவிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வந்தனர். மேலும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் நேற்று விஜய் ஆண்டனியின் வீட்டில் தான் இருந்தது.

Also Read:ஒரு வழியா கழுகுக்கு நாள் குறித்த விஜய்.. மிரட்டப் போகும் லியோ ஆடியோ லான்ச்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சன் பிக்சர்ஸ் இந்த தீம் மியூசிக்கை வெளியிட்டு கொண்டாடியது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். சரி, அவங்க வேலையை அவங்க செய்றாங்க உங்களுக்கு என்ன அப்படி என்று கேட்டால், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் போஸ்டர் இரண்டு தினங்களாக தினமும் ஒவ்வொன்று என ரிலீஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் விஜய் ஆண்டனியின் சோகத்தில் பங்கெடுக்கும் விதமாக இன்று போஸ்டர் வெளியிடப்படாது என லியோ பட குழு அறிவித்துவிட்டது.

இப்படி லியோ பட குழு மொத்தமாய் ஸ்கோர் செய்த நிலையில் வாண்டட் ஆக நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டது சன் பிக்சர்ஸ். இது போன்ற விஷயத்தால் ரஜினியின் பெயரும் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் அவர் பயங்கர டென்ஷனில் இருக்கிறார். வழக்கம் போல இந்த விஷயத்தில் தளபதி விஜய் ஜெயித்துவிட்டார்.

Also Read:மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்த லியோ.. மிரட்டும் புது போஸ்டர்