சூரியிடம் துருவி துருவி கேள்வி கேட்ட போலீஸ்.. பண மோசடியில் சிக்கிய விஷ்ணு விஷாலின் தந்தை

விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் சூரி நடித்துள்ளார். இதனால் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே நட்பு மலர்ந்துள்ளது. இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி பணம் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை மீது சூரி புகார் அளித்திருந்தார்.

ஆனால் விஷ்ணு விஷால் தனது தந்தை மீது சூரி பொய்யான புகாரை கொடுத்துள்ளார் எனக் கூறிவந்தார். அதாவது சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் 2.70 கோடி பண மோசடி செய்ததாக சூரி அடையார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கை முறைப்படி அடையார் போலீஸார் விசாரிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கை தொடர்ந்து இருந்தார். இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதனால் போலீசார் சூரியிடம் கிட்டத்தட்ட 110 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அவை அனைத்திற்கும் சூரி பதிலளித்து சென்றுள்ளார். தற்போது விஷ்ணு விஷாலின் தந்தையை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை எனக்கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இருதரப்பு இடமும் விசாரணை நடைபெற்றதால் விரைவில் யார் குற்றவாளி என்பது தெரியவரும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சூரி மீது எந்தத் தவறும் இல்லை, விஷ்ணு விஷாலின் தந்தை தான் ஏமாற்றியுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்