போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து எஸ்கேப்பான சிவகார்த்திகேயன்.. எல்லா படத்துக்கும் பலிகடாவாக முடியாது

சிவகார்த்திகேயனின் டான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. டாக்டர் படம் வசூலை வாரி குவித்த நிலையில் இப்படமும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி,சிவாங்கி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலையில் இருந்து சிவகார்த்திகேயன் தனது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தை தனது எஸ்கே ப்ரெடக்ஷன் நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காப்பி எடுத்து உள்ளார். இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் 50 கோடி ஆகும்.

மேலும் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வங்கி உள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைக்கா பெற்றுள்ளது. டான் படத்தின் காப்பி ரைட்ஸ் உரிமையை அப்படியே லைக்கா 50 கோடி கொடுத்து வாங்குவதாக தான் அக்ரிமென்ட்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 25 கோடி எனில் மீதமுள்ள 25 கோடியில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லைகா சிவகார்த்திகேயனுக்கு 10 கோடி மேல் பாக்கி வைத்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயன் போனை சுவிட்ச் ஆப் செய்துயுள்ளார்.

மேலும் டான் படத்தை வெளிநாட்டிற்கு சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாததால் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு பணத்தை செட்டில் பண்ணி ரிலீசுக்கு அனுமதி வாங்கி உள்ளது. அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் தனது போனை ஆன் செய்தாராம்.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திலேயே நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டார். இப்பொழுதுதான் கடனை பிரச்சனையெல்லாம் ஒரு வழியாக முடித்து விட்டு நிம்மதியாக அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மீண்டும் கடனாளியாக முடியாது என இவ்வாறு விவரமாக செயல்பட்டு வருகிறார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்