ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. ஏமாற்றத்தால் சிவகார்த்திகேயனை தூக்கி விட வரும் இயக்குனர்

Actor Sivakarthikeyan: இப்போது 100 கோடி வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை ஆயிரம் கோடி வசூல் மன்னனாக மாற்ற வேண்டும் என ஒரு இயக்குனர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் ஓரளவு நல்ல வசூலை பெற்றது.

அடுத்ததாக அவருடைய நடிப்பில் அயலான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

Also Read : அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களை வளர்த்து விட்ட முருகதாஸ் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்க காரணம் இருக்கிறது. அதாவது மாஸான ஒரு கதையை ஷாருக்கானுக்காக முருகதாஸ் தயார் செய்து வைத்திருந்தார்.

இந்த கதை ஷாருக்கானுக்கு பிடித்திருந்தும் சில காரணங்களினால் படத்தை தள்ளி போட்டு கொண்டே வந்திருக்கிறார். பொறுத்து பார்த்துவிட்டு பொங்கி எழுந்த முருகதாஸ் அதன் பிறகு விஜய் இடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். அவரும் தன் பங்குக்கு சில வருடங்கள் முருகதாஸை இழுத்தடித்திருக்கிறார்.

Also Read : சிவகார்த்திகேயனுடன் முருகதாஸுக்கு இப்படி ஒரு பந்தமா? விஜய் மறுத்தும் தூக்கிவிட இதுதான் காரணம்

இதனால் பொங்கி எழுந்த முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பது போல தானாக வந்த இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக் கொண்டு முருகதாஸை லாக் செய்து விட்டார்.

தன்னை அலைக்கழித்த ஷாருக்கான் மற்றும் விஜய் இருவருக்கும் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தரமான படமாக சிவகார்த்திகேயன் படத்தை முருகதாஸ் எடுக்க உள்ளாராம். ஆகையால் இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்ற வடிவேலுவின் தோணியில் இப்போது சிவகார்த்திகேயன் இருக்கிறாராம்.

Also Read : 800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 5 படங்கள்.. பொங்கல் பண்டிகையை குறி வைத்த அயலான்

- Advertisement -

Trending News