பாக்ஸ் ஆபிஸை கலக்கும் சிவகார்த்திகேயன்.. 11 வருடத்தில் செய்த ஒட்டுமொத்த சாதனை

மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். 11 ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் சிவகார்த்திகேயனின் சாதனைகள் தற்போது சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்களால் வைரலாக பேசப்படுகிறது.

மெரினா படத்திற்கு பிறகு இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் இவருடைய அலட்சியமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக அமைந்தது.

Also Read: அடுத்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 5 படங்கள்.. பல வருடங்களாக காத்து கிடக்கும் அயலான்

இப்படி சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து 11 வருடங்களில் 21 படங்களை அசால்டாக நடித்திருக்கிறார். அதில் 10 படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 4 படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் டாக்டர், டான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான மெரினா துவங்கி வேலைக்காரன் வரை தொடர்ந்து 10 ஹிட் படங்களை வரிசையாக சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறார். இதுமட்டுமின்றி 4 படங்களில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து ஏறுமுகமாக அமைந்த நிலையில் தன்னை கமர்ஷியல் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்திக் கொண்டார்.

Also Read: ஆன்லைன் மாஃபியாக்களுக்கு இரையாகும் சிவகார்த்திகேயன்.. திடீர் வளர்ச்சியால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியராகவும் தன்னை ரசிகர்களிடம் சிறப்பாக வெளிப்படுத்தினார். மேலும் இவர் திரையுலகில் பயணித்த இந்த 11 வருடமும் நம்ம வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து வருகிறார். இதனால் விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு தான் குழந்தைகள், பெண்கள் அதிகம் விரும்பும் கதாநாயகனாக அவர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

இதனால் சிவகார்த்திகேயன் எந்த வித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தன்னுடைய உழைப்பும் திறனையும் மட்டுமே வைத்து உயர்ந்ததால் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் மாறி உள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் படம் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: சிவகார்த்திகேயனை அனைவருக்கும் பிடிக்க 7 காரணங்கள்.. மார்க்கெட் இப்பவும் நிக்க இதுதான் விஷயம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்