சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக மார்ச் 26ஆம் தேதி டாக்டர் படம் வெளியாக இருக்கும் நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ரம்ஜான் விடுமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் அயலான் படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் பேன் இந்தியா படமாக அயலான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்காக மிகவும் உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
அது இந்த புகைப்படத்தை பார்த்ததும் உறுதியாகிவிட்டது. சிவகார்த்திகேயனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் அளவில் அநியாயத்திற்கு ஒல்லியாகி விட்டார்.
சிவகார்த்திகேயனின் தலை மட்டும் பெரிதாகவும் உடல் சிறிதாகவும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா என கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். டான் படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.
