சூர்யாவுக்கு மேல நான்தான் என நிரூபிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்.. லிஸ்ட் வந்ததிலிருந்து ஆள் சரியில்லையே!

ஏற்கனவே தியேட்டர்காரர்கள் சிவகார்த்திகேயனுடன் சூர்யாவை ஒப்பிட்டு லிஸ்ட் வெளியீட்டு பிரச்சனையை கிளப்பி நிலையில் அதைப் பிடித்துக்கொண்டு சிவகார்த்திகேயன் செய்திருக்கும் வேலை அனைவரையும் சங்கடப்பட வைத்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு தற்போது செம மார்க்கெட் உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அவரது படங்கள் வெளியீட்டின்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர் கூட்டம் திரள்கிறது.

இதனை பயன்படுத்தி சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகராக இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் தியேட்டர்காரர்கள் வெளியிட்ட லிஸ்டில் இரண்டாம் கட்ட நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இதே வரிசையில்தான் சூர்யாவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரெடியாக இருக்கும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தை அமேசான் நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்க்கு விலை பேசி வருகிறார்களாம்.

ஆனால் அவர்களோ சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்கே அவ்வளவு கொடுக்கவில்லை என கூறிவிட்டார்களாம். இருந்தாலும் படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால் விலையை அதிகமாக சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டாக்டர் படம்.

ஏற்கனவே சூர்யாவுடன் இணைந்து இரண்டாவது கட்ட நடிகர்களில் சேர்ந்த சிவகார்த்திகேயன் சூர்யாவின் படங்களைவிட தன்னுடைய படம் அதிக வியாபாரம் செய்யப்படுவதாக காட்டிக் கொள்ள நினைக்கிறார் என ஒருபக்கம் கிளப்பி விட்டு விட்டார்கள். இதுதான் இன்றைய கோலிவுட் கோடம்பாக்க ட்ரெண்டிங்.

doctor-cinemapettai
doctor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்