300 கோடி பட்ஜெட், சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. உடும்பு பிடியாக பிடித்த இயக்குனர்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என்ற செய்தியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஒரு வெற்றியை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வரும் ஏ ஆர் முருகதாஸ் இப்போது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதில் நடிப்பதற்கு பல முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Also read: போதையில் கதை கேட்கும் நடிகர்.. கூட நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்

ஆனால் யாரும் இதற்கு சம்மதிக்காத நிலையில் ஏ ஆர் முருகதாஸ் ஹீரோவே இல்லாமல் அனிமேஷன் முறையில் படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த சமயத்தில் தான் சிவகார்த்திகேயன் இவருடன் கூட்டணியமைக்க சம்மதித்திருக்கிறார்.

இது குறித்து ஏற்கனவே அவர் மேடையில் பேசிய நிலையில் தற்போது இந்த கூட்டணி அடுத்த சம்பவத்திற்கு தயாராகி விட்டது. ஆனாலும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் முதலில் தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லாடி இருக்கின்றனர்.

Also read: சினிமாவுக்கு வரதுக்கு முன்னால் 5 ஹீரோக்கள் செய்த வேலைகள்.. மேடையிலேயே வச்சி செய்யும் சிவகார்த்திகேயன்

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனும் இப்போது தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தி விட்டார். முன்னதாக 25 முதல் 30 கோடி வரை மட்டுமே அவர் சம்பளமாக வாங்கி வந்தார். தற்போது அவருடைய மாவீரன் வெற்றி பெற்ற நிலையில் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

இருந்தாலும் அவரை உடும்பு பிடியாக பிடித்துள்ள ஏ ஆர் முருகதாஸ் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை வளைத்து போட்டு விட்டார். அந்த வகையில் இவருக்கு 40 கோடி சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. மேலும் இதர பட்ஜெட் 200 கோடி அடிப்படையில் இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. அப்படி பார்த்தால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

Also read: தோல்வியால் அடுத்தடுத்து விழுந்த மரண அடி.. விஜய், அஜித் பட இயக்குனரை தூக்கி விடும் சிவகார்த்திகேயன்

- Advertisement -spot_img

Trending News