சினிமாவுக்கு வரதுக்கு முன்னால் 5 ஹீரோக்கள் செய்த வேலைகள்.. மேடையிலேயே வச்சி செய்யும் சிவகார்த்திகேயன்

Tamil Actors: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலரும் இருக்கின்றார்கள். இருப்பினும் தற்போது சிறுசுகளிலிருந்து பெருசுகள் வரை கொண்டாட கூடிய வகையில் பேமஸ் அகா இருக்கும் பிரபலங்கள். சிலர் நடிக்க வருவதற்கு முன்பே என்ன செய்து கொண்டிருந்தார்கள். எப்படி சினிமாக்குள் வந்தனர் என்பது ஒரு கண்ணோட்டம்.

சிவா: 2007 இல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவா. இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பு, இன்ஜினியராக பல கம்பெனிகளில் வேலை செய்தார். பிறகு சென்னையில் உள்ள ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கி ஆக வேலை செய்தார். இதனால் தான் இவருக்கு மிர்ச்சி சிவா என்னும் பெயர் வந்தது.

Also Read:பாஞ்சாலிக்கு 5 புருஷன் தான்.. ஆனா எனக்கு 15, மேடையிலேயே தைரியமாக போட்டுடைத்த அமலா பால்

சிவகார்த்திகேயன்: தற்போது ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்பு, கலக்கப்போவது யாரு, காமெடி கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது கெரியரை தொடங்கினார். அதற்குப் பிறகு ஜோடி நம்பர் ஒன், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து அசால்டாக மேடையிலே பிரபலங்களை கலாய்ப்பார். 2012ல் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான மரினா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

கார்த்தி: பிரபல நடிகரான சிவகுமாரின் மகன் கார்த்தி, நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு கிராபிக் டிசைனராக இருந்ததார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து திரைப்படத்தில் துணை இயக்குனராக இருந்தார். 2007 இல் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

Also Read:33 வருடங்களுக்குப் பின் ராம்கி எடுக்க ஆசைப்படும் சூப்பர் ஹிட் படம்.. அந்த ரெண்டு ஹீரோ நடித்தால் வெற்றி உறுதி

மாதவன்: சாக்லேட் பாய் என அழைக்கப்படும் மாதவன், கல்லூரி காலத்திலேயே மிலிட்டரி, நேவி, ஏர் போர்ஸில் ட்ரைனிங் எடுத்தவர். சமூகப் பேச்சாளராக தொடங்கி தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து மாடலிங் மீது கவரப்பட்டார். பெப்சி, பிரிட்டானியா போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். அதற்குப் பிறகு ஹிந்தியில் நடிகராக அறிமுகமாகி, தமிழில் 2000 ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதற்கு முன்னே, துபாயில் சூப்பர் மார்க்கெட்டில் கேசியராக 3 வருடங்கள் வேலை செய்தார். நாடகக் கலைஞராக தொடங்கி , இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான “அது ஒரு கனாக்காலம்” திரைப்படத்தில் பின்னணி நடிகராக சினிமாக்குள் நுழைந்தார். பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார், “தென்மேற்கு பருவக்காற்று” எனும் திரைப்படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து, இப்போது பன்முக திறமை கொண்ட கலைஞனாக இருக்கிறார்.

Also Read:அஜித் வீட்டு சிசிடிவி கேமராவில் முகத்தை காட்டினேன்.. உதவி கிடைக்காமல் அல்லாடும் நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்