சிவாஜியின் இந்த சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா அண்ணாத்த? இந்த சென்டிமெண்ட் செட்டாகுமா ரஜினிக்கு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் ஒரு காலத்தில் எந்த நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை வைத்திருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசன்  நடிப்பை பார்த்து உலக அளவில் பலரும் பாராட்டியுள்ளனர். இவ்வளவு ஏன்  ஒரு நாட்டின் பிரதமரே இந்த நடிகர் யார் என கேட்டு அவரை சந்திப்பதற்கு அனுமதி வாங்குமாறு கூறியுள்ளார் அந்த அளவிற்கு சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர்.

சிவாஜிகணேசன் என்றால் அவரது நடிப்பை தாண்டி ஒரு சில படங்களை அனைவருக்கும் ஞாபகம் வரும் அப்படி இவரது நடிப்பில் பெயர் பெற்ற படம்தான் பாசமலர். அண்ணன் தங்கை  சென்டிமென்டில் உருவான இப்படம் அன்றைய காலத்தில் சக்கைபோடு போட்டு இப்போது வரை இப்படத்தின் தாக்கம் அனைவர் மனதிலும் பதிந்துள்ளது.

sivaji ganesan rajinikanth keerthy suresh
sivaji ganesan rajinikanth keerthy suresh

தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதுவரைக்கும் ரஜினிகாந்த் எந்த ஒரு தங்கை சென்டிமென்ட் கதையிலும் நடித்ததில்லை. ஆனால் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தங்கை சென்டிமென்ட் கதையில் கலக்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஒரு சிலர் பாசமலர் திரைப்படத்தை அப்படியே காப்பி அடித்து தான் அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளதாகவும்,  இந்த படம் வெற்றி அடைந்தால் மட்டும் தான் இனிமேல் ரஜினிகாந்த் தங்கை சென்டிமென்ட் கதையில் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்