ஒரு கோடி பார்வையாளர்களைக் ஒரே வாரத்தில் கவர்ந்த சிம்பு.. அப்படி என்னப்பா ஸ்பெஷல் அதுல

சிம்பு உடலை குறைத்து திரும்ப வந்தாலும் வந்தார் தற்போது சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய பேச்சுக்கள் இல்லாத நாளே இல்லை. அதுமட்டுமில்லாமல் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ஊரடங்கு போடப்பட்டதால் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ சிம்புவுக்கு செம்மையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. தொப்பையும் தொந்தியும் ஆக இருந்த சிம்பு ஸ்லிம்மாக மாறி மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

இது சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் உடலை குறைத்ததில் இருந்து பார்ப்பதற்கு செம ஸ்டைலாக மாறி விட்டார் சிம்பு.

சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு படம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையாக சிம்பு நடிப்பில் பல படங்கள் உருவாக உள்ளன. மார்க்கெட்டே இல்லாத நடிகருக்கு இவ்வளவு படங்களா என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க நீண்ட நாட்களாக தாடியுடன் காட்சியளித்த சிம்பு முதல்முறையாக க்ளீன் ஷேவ் செய்து பழைய வல்லவன் கெட்டப்பில் திரும்ப வந்தது ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் அந்த வீடியோ தற்போது ஒரு கோடி பார்வையாளர்களை வெறும் ஒரே வாரத்தில் கலந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது ஒரு கோடியே 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் சாதாரணமாக வெளியிட்ட வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களை குவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சிதான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்