பாலிவுட் செல்லும் சிம்பு.. எங்க போனாலும் தனுஷ விட மாட்டாரு போலயே

அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் என்பதைப் போல உடல் எடையை குறைத்ததற்கு பிறகு சிம்புவுக்கு குரு உச்சத்தில் இருக்கிறான் போல. தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம்.

தமிழ் சினிமாவில் கமலஹாசனை போல் சிறு வயதிலிருந்தே நடித்து வருபவர் சிம்பு. சினிமாவில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் என பேட்டிக்கு பேட்டி சிம்புவின் நண்பர்களும் உறவினர்களும் கூறி வருகின்றனர். அப்படிப்பட்டவர் தான் தற்போது மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறார். இருந்தாலும் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மற்ற எந்த இளம் நடிகர்களும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் சிம்புவின் அடுத்த படமாக விரைவில் மாநாடு வெளியாக உள்ளது. தற்போது சென்னையில் மிகப்பெரிய செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

இதன் புகைப்படங்கள் கூட வெளியாகி இணையத்தில் ஒரு நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. உடல் எடையை குறைத்த அதிர்ஷ்டம் தான் தற்போது சிம்புவுக்கு புதிதாக பாலிவுட் பட வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவிலேயே பாலிவுட் ரேஞ்சுக்கு ரொமான்ஸில் பின்னி எடுப்பார் சிம்பு. நேரடியாக பாலிவுட் படமே கிடைத்தால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அமலி துமலிதான். பாலிவுட் சினிமாவின் ரொமான்டிக் இளம் இயக்குனர் ஒருவர் சிம்புவை சந்தித்து ஒரு காதல் கதையை கூறி சம்மதம் வாங்கியுள்ளாராம்.

simbu-cinemapettai-01
simbu-cinemapettai-01

ஏற்கனவே தனுஷுக்கும் சிம்புவுக்கும் முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சிம்புவின் பாலிவுட் என்ட்ரி எந்த மாதிரி இருக்கப்போகிறது என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என சிம்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்