Connect with us
Cinemapettai

Cinemapettai

tv-channels-trp

Tamil Cinema News | சினிமா செய்திகள்

200 எபிசோடுகள் தாண்டிய பிரபல டிவி சீரியல்.. வைரலாகும் ரொமான்டிக் வீடியோ!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்ற சீரியல் தான் ‘ஜில்லுனு ஒரு காதல்’. சமீப காலமாகவே வெள்ளித்திரையில் வெளியான திரைப்படங்களின் டைட்டிலை வைத்து சீரியல் உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படமானது சூப்பர் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே. அதே போல் தான் ஜில்லுனு ஒரு காதல் சீரியலும் ரொமான்ஸ்க்கு பஞ்சமில்லாமல் கொண்டு செல்வதால் ரசிகர்களிடையே ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய சீரியலாக மாறிவிட்டது.

இந்த சீரியலில் சூரியகுமார் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் சமீர் அஹமது கதாநாயகராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கதாநாயகி கயல்விழி கதாபாத்திரத்தில் தர்ஷினி கவுடா மிகக் கச்சிதமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜில்லுனு ஒரு காதல் சீரியல், 200 எபிசோடை கடந்ததற்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவித்ததுடன், அவர்கள் இணைந்து நடித்த ரொமான்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளனர்.

அதே போல் ஜில்லுனு ஒரு காதல் சீரியல் குழுவினர்கள் 200 எபிசோடை கடந்ததற்காக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும், சீரியலில் தனமாக நடிக்கும் ரேகா அஞ்சலினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் ரொமான்டிக் வீடியோ!

seeial-cinemapettai

seeial-cinemapettai

எனவே ஜில்லுனு ஒரு காதல் சீரியல் குழுவினர்களின் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து எக்கச்சக்கமான வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

Continue Reading
To Top