Connect with us
Cinemapettai

Cinemapettai

sun-vijay-tv-serial-trp

India | இந்தியா

அனல் பறக்கும் இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் தொடர்ந்து டாப் 6 இடங்களை மற்ற எந்த சேனலுக்கும் விட்டுக் கொடுக்காமல் ஒரே சேனல் ஆக்கிரமித்து இருக்கிறது.

வெள்ளித்திரைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பது போல் சின்னத்திரை சீரியல்களுக்கு என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் எந்த சீரியலை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வர டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இதில் 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 9-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் அப்பா மகளின் பாசத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்த சீரியலில் கௌதம் குடும்பத்திற்கு எதிராக மேனகாவின் சுழற்சி நிறைந்த தந்திரத்தால் ஏற்பட்டுள்ள சிக்கலில் நீண்டகாலமாக அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த மீரா தற்பொழுது அப்பாவினை விட்டு நிரந்தரமாக பிரிந்துள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மீராவின் கணவர் குடும்பத்தில் மருமகன் போல் அல்லாமல் அப்பா மகன் போல் இருந்த நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் கௌதமின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்களுடன் சண்டையிட்டு மீராவும் யுவாவும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளது போல கதைக்களமானது நகர்ந்து கொண்டிருக்கிறது. கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இனியா: இந்த சீரியலில் யாழினிக்கும் இனியாவுக்கும் ஒருவழியாக திருமணம் செய்து வைப்பதற்கு முன்னேற்பாடாக நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதற்காக அனைவரும் விக்ரமின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை விக்ரமின் அத்தை  மற்றும் அவரது மகள்கள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். நடக்கவிருக்கும் திருமணத்தில் இன்னும்  என்னவெல்லாம் கலாட்டா நடக்கப் போகிறதோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியா அசுர வேகத்தில் முன்னேறி இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் குணசேகரன் குடும்பத்தில் தற்பொழுது இரு கூட்டணிகளாக பிரிந்துள்ளனர். இதில் அப்பத்தாவின் கூட்டணியானது பொங்கல் பண்டிகை கொண்டாட கிராமத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆதிரா மூலமாக ஒரு பெரும் பூகம்பமே வீட்டில் வெடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க பண்டிகைக்காக சென்ற இடத்தில் தாராவை காணவில்லை என்ற பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரு கூட்டணிகளுமே வெவ்வேறான பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர். அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்நீச்சல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் முருகன் அவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்கு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சுந்தரி தனது முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். ஆனால் அதற்கான சந்தோஷம் நீடிப்பதற்குள் சுந்தரிக்கு தலையில் அடிபட்டுள்ள காரணத்தினால் தற்பொழுது பார்வை பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் சுந்தரியின் கணவர் என்ற முறையில் கார்த்திக் அவருடனே இருக்கின்றார். ஆனால் அனுவிற்கோ இவற்றையெல்லாம் பார்க்க பார்க்க சுந்தரியின் மீது அளவு கடந்த கோபம் எரிமலை போல் வெடித்து சிதறுவது போல் காண்பிக்கின்றனர். கார்த்திக் அணுவின் திருமணம் குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த நிலையில் எப்பொழுது அனுவிற்கு தெரியும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: சக நடிகையை படு கேவலமாக திட்டிய அசீம்.. ஒரிஜினல் முகத்தைப் பார்த்து அரண்டு போன சூட்டிங் ஸ்பாட்

வானத்தைப்போல: இந்த சீரியலில் துளசி நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பிரச்சனையில் இருந்து  ஒரு வழியாக சந்தியாவின் உதவியின் மூலம்  தப்பித்துள்ளார். ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து பொன்னி கொஞ்சம் கொஞ்சமாக சின்ராஸின் பக்கம் சாய்வது போல தோன்றுகிறது. இதில் சந்தேகம் ஏற்பட்டு சரவணன் சின்ராசை கொலை செய்ய முயற்சி செய்வது போல் கதைக்களமானது நகர்ந்து கொண்டிருக்கிறது. வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் ஒரு பெண் தலைமை தாங்கி நிற்கும் குடும்பத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதனை சமாளிப்பதற்கான சூழ்நிலைகளையும் எவ்வாறு கையாளுகிறாள் என்பதை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு வழியாக தேவியின் வாழ்க்கைக்கு தேவையானதை பூர்த்தி செய்த நிலையில் ஆனால் பிரச்சனை மற்றும் ஓய்ந்த பாடு இல்லை.   கயல் தனது பெரியப்பாவின் சூழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு முறையும் தனது குடும்பத்தை எவ்வாறு மீட்டுக் கொண்டு வருகிறார் என்பதை மையமாகக் கொண்டும் சமூகத்திலிருந்து எழக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு திறம்பட கையாளுகிறார் என்பதை மையமாக கொண்டு இக்கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தொடர்ந்து  முதல் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் சன் டிவியின் சீரியல்களே ஆக்கிரமித்துள்ளது. விஜய் டிவியை நிரந்தரமாகவே பின்னுக்குத் தள்ளிய நிலையில் புத்தம் புது வரவாகும் வந்த இனியா 5-வது இடத்தை வெகு சீக்கிரமே பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகின்ற கயல் சீரியல் ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாகவே மாறிவிட்டது.

Continue Reading
To Top