சமுத்திரக்கனியின் இன்னொரு படமும் நேரடி டிவி ரிலீஸ்.. இது தனுஷ் பட இயக்குனர் படமாச்சே!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. நடிக்க வருவதற்கு முன்பே சீரியலில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் சீரியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில் தான் சசிகுமார் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் நடிகராக மாறினார்.

அதன்பிறகு இருவரும் இணைந்து நாடோடிகள் என்ற படத்தை எடுத்தனர். அதன் மூலம் சினிமாவிலும் இயக்குனராக வெற்றி கண்டார் சமுத்திரக்கனி. சமுத்திரகனியின் ஒவ்வொரு படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு உண்டாகி விடுகிறது.

சமீபகாலமாக இயக்கத்திற்கு விடுப்பு கொடுத்து விட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், நல்ல கேரக்டர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இடையில் ஹீரோவாகவும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார். அப்படி உருவான திரைப்படம் தான் வெள்ளை யானை. தனுஷுக்கு திருடா திருடி என்ற படத்தை கொடுத்த சுப்பிரமணியம் சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

படம் உருவாகி நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸ் குளறுபடிகள் நடந்துகொண்டே இருந்தது. இதனால் சோகம் அடைந்த தயாரிப்பாளர் இந்த படத்தை நேரடியாக டிவியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம். விரைவில் எந்த சேனலில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளிவரும்.

இதேபோல்தான் சமுத்திரகனி ஹீரோவாக நடித்த ஏலே என்ற திரைப்படம் விஜய் டிவியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

vellai-yaanai-cinemapettai
vellai-yaanai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்