சிலம்பம் சுற்றி தெறிக்கவிட்ட சமந்தாவின் வீடியோ.. 1.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கால்ஷீட்காக பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் பிஸியாக நடித்து வரும் சமந்தா, தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர தெலுங்கில் குணசேகர் எழுதி இயக்கும் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க இவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் சிலம்பம் கற்க போவதாக நடிகை சமந்தா அறிவித்துள்ளார்.

முன்னதாக நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு முறையாக சிலம்பம் கற்க தொடங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்திற்காகத்தான் சமந்தா முதல் முறையாக சிலம்பம் கற்க தொடங்கினார். மேலும் சிலம்பம் தனது புதிய பொழுதுபோக்கு எனவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிலம்பத்தை தான் ரொம்ப மிஸ் செய்வதாகவும், மீண்டும் அதை துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

samantha-silambam
samantha-silambam

இந்நிலையில் சமந்தா சிலம்பம் கற்கும் பழைய வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்காக முறைப்படி சிலம்பம் கற்ற சமந்தாவை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்