சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நீயும் வேண்டாம், 4000 கோடி சொத்தும் வேண்டாம்.. கெத்து காட்டிய சமந்தா, தடுக்கி விழுந்த நடிகர்

Actress Samantha: எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தைரியமாக சமாளித்து வரும் சமந்தா அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவார். ஆனால் அதை எல்லாம் தூசி தட்டுவது போல் தட்டிவிடும் இவர் தன்னுடைய உடல்நல பிரச்சனைகளை கடந்து இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு புறம் இருந்தாலும் சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற செய்தியும் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்த குஷி படம் தான். அப்பட சூட்டிங் சமயத்திலேயே விஜய் தேவரகொண்டா உடன் இவர் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

Also read: கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

அது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டா தன் சோசியல் மீடியா பக்கத்தில் இரு கைகள் இணைந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பார்த்த அனைவரும் அது சமந்தாவின் கைதான் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அதாவது சமந்தா தன்னுடைய விவாகரத்து சமயத்தில் கணவர் தரப்பிலிருந்து கொடுக்க இருந்த ஜீவனாம்சத்தை வேண்டாம் என்று மறுத்தார்.

Also read: 2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா.. நாசுக்காக பதிலளித்த சமந்தா

கிட்டத்தட்ட 4000 கோடிக்கு சொந்தக்காரரான நாகச் சைதன்யாவை நீயும் வேண்டாம் உன் சொத்தும் வேண்டாம் என மறுத்து கெத்து காட்டியவர் தான் சமந்தா. அதுதான் விஜய் தேவரகொண்டா மனதில் அவர் இடம் பிடிப்பதற்கும் காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கூறுகின்றனர். ஆனால் பிசியான நடிகையாக இருக்கும் அவர் நிச்சயம் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டார். அந்த வகையில் சமந்தா, விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொண்டால் ஒட்டு மொத்த ரசிகர்களும் சந்தோஷப்படுவார்கள் என கூறிய செய்யாறு பாலு மறைமுகமாக இவர்கள் காதலிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Also read: முகத்தை வெளியில் காட்ட முடியாமல் தவிக்கும் சமந்தா.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்

- Advertisement -

Trending News