தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஆனால் சமீபகாலமாக சமந்தாவின் புகழனைத்தும் தெலுங்கு பக்கம் தான் உள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு குவிந்து வருகின்றன.
முதலில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி என ஒப்புக் கொண்ட சமந்தா வெற்றி கண்ட பிறகு ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் நடிப்பேன் என அனைத்து இயக்குனர்களுக்கும் கட்டளையிட்டார். அதனால் சமந்தாவிற்கு முக்கியமான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குனர்கள் முன்வந்தனர்.
என்னதான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது முரட்டு காதல் தான். அதனால் தற்போது சமந்தா காதல் படத்தில் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாக மேனேஜர் மூலம் தூது விட்டுள்ளார்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் அமேசான் இணையதளத்தில் வெளியான ‘தீ ஃபேமிலி மேன்‘ வெப் சீரியஸில் இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இருந்ததாக சர்ச்சையைக் கிளம்பியது. அதனால் படக்குழு அதற்கான விளக்கத்தை கூறி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உடான்ஸ் விட்டது.
தீ ஃபேமிலி மேன் வெப் சீரியஸ் ப்ரோமோஷன் வேலையில் ஈடுபட்ட போது உங்களுக்கு பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்வதற்கு சமந்தாவிற்கு ஆசை இருக்கிறது என கேள்வி கேட்டனர். அதற்கு சமந்தா ரன்பீர் கபூருடன் தான் ரொமான்ஸ் காட்சி மற்றும் காதல் காட்சி நடிக்க ஆசை இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த மனுசன் சும்மாவே ரொமான்ஸ் ரொம்ப பண்ணுவார் சமந்தா இப்படி சொன்னால் சும்மா விடுவாரா. ஒரு சில ரசிகர்கள் கல்யாணத்துக்கு பிறகு எதுக்கு இந்த ரொமான்ஸ் என கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுக்காமல் உணவு விருந்துலாம் வைத்து வலை வீசுகிறாராம்.