கேஜிஎஃப் காந்தாரா படத்தை தோற்கடிக்க போகும் சலார்.. முழிப்பிதுங்கி பேய் நிற்கும் பிரபாஸ்

Salaar Movie: ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தாலே அது அனைத்து விதமான மக்களையும் கவர்ந்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது பெரிய நடிகர்களின் படங்கள் பான் இந்திய படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த அக்கடதேச படங்களில் முதலிடத்தை பிடித்தது கேஜிஎஃப் மற்றும் காந்தாரா.

இதனாலையே நாலா பக்கமும் முன்னணி நடிகர்கள் பான் இந்திய படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலாம் படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அத்துடன் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகப்போகிறது.

மேலும் இப்படம் ஹாலிவுட் டெக்னாலஜியை தோற்கடிக்கும் அளவிற்கு சலார் படம் தரமான சம்பவத்தை செய்யப் போகிறது. இப்படத்தில் ஆக்சன் மற்றும் நட்பு சம்பந்தமான கதையை மையப்படுத்தி இருக்கிறது. இதில் பிரித்விராஜ், சுருதிஹாசன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Also read: ரஜினி படத்தை காப்பி அடித்த சலார்.. 1000 கோடிக்கு அடி போடும் படம்

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி பார்ப்பவர்களை புல்லரிக்கும் வகையில் வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் அதிகமாக கவர்ந்திருக்கிறது. முக்கியமாக இப்படத்தின் பிரபாஸின் நண்பராக இருக்கும் பிரித்விராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படத்தை தோற்கடிக்கும் வகையில் சலார் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார்.

அதே மாதிரி பிரபாஸ் இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றால் மட்டுமே அவருடைய கேரியரில் நிலைத்து நிற்க முடியும். ஏனென்றால் இவருக்கு பாகுபலி படத்திற்கு பிறகு வெளிப்பந்த படங்கள் எதுவும் பெருசாக வெற்றி பெறவில்லை. முக்கியமாக ஆதிபுருஷ் படம் ரசிகர்களிடமிருந்து கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி ரொம்பவே அவமானப்பட்டு இருக்கிறார்.

இதையெல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு சலார் படம் பிரபாஸுக்கு கை கொடுத்தால் மட்டுமே மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால் படம் எப்படி இருக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் முழி பிதுங்கிக் கொண்டு, வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு நிற்கிறார். அந்த வகையில் இன்னும் நான்கு நாட்களிலேயே இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: சலார் படத்தை அலங்கரிக்கும் 4 தமிழ் நடிகர்கள்.. குக் வித் கோமாளி மூலம் கிடைத்த வாய்ப்பு

- Advertisement -spot_img

Trending News