ரஜினி படத்தை காப்பி அடித்த சலார்.. 1000 கோடிக்கு அடி போடும் படம்

Actor Prabhas: ரஜினியை தங்கள் படங்களில் ரெஃபரன்ஸ் ஆக உபயோகப்படுத்திக் கொள்வதில் இப்போது இருக்கும் இளம் ஹீரோக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படித்தான் அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்து துவண்டு போயிருக்கும் பிரபாஸ், ரஜினி படத்தை காப்பி அடித்துள்ளார்.

ஆதிபுருஷ் படத்தின் படு தோல்வியால் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கும் இவர் தற்போது நடித்து முடித்துள்ள சலார் படத்தை தான் பெருமளவில் நம்பி இருக்கிறார். கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அட்டகாசமாக உருவாகி இருக்கிறது.

Also read: ஆள விடுங்கடா சாமி என மாயமான பிரபாஸ்.. ராஜமவுலி எடுத்தா கூட என்னை விட்ருங்கப்பா

சமீபத்தில் வெளிவந்த இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கே ஜி எஃப் இயக்குனர் என்பது தான். மேலும் பிரபல மலையாள ஹீரோ பிரித்விராஜ் இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் சூப்பர் ஸ்டார் படத்தின் காப்பி தான் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது இப்படத்தில் பிரபாஸ் தன் நண்பனின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் வகையில் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுவாராம். அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

Also read: முழு தமிழ் நடிகராக மாறிய பிரபாஸ்.. தடுத்து நிறுத்தி கல்லாவை நிரப்ப உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்

இது அப்படியே சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா படம் போல் இருக்கிறது. அதிலும் மாணிக்கமாக இருக்கும் ரஜினி தன் நண்பனின் மரணத்திற்குப் பிறகு மாணிக் பாட்ஷாவாக மாறுவார். இந்த ஒரு கருவை மையப்படுத்தி தான் சலார் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் அதிகமாக சலசலக்கப்பட்டு வருகிறது. மேலும் கே ஜி எஃப் 2 படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்குமா என்றும் அந்த நண்பன் ராக்கி பாய் தானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் 1000 கோடி வசூலை அடைவதற்கு இப்போது பட குழு தயாராகி விட்டனர்.

Also read: அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்