ராஜமவுலியின் பட டைட்டிலை அப்போதே கணித்த சிங்கம் சூர்யா.. வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சற்று தடுமாறி வந்தன. ஆனால் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரிய அளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனால் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகராக சூர்யா வலம் வந்து கொண்டிருக்கிறார். சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அண்மைகாலமாக இப்படத்தின் தகவல் தான் சமூக வலைதளங்களில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறிப்பிட்டு சூர்யா ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலரும் பாதித்தனர். அதற்குக்கூட சூர்யா தனது ஏழாம் அறிவு படத்தில் முன்கூட்டியே கூறியதாக கூறினர்.

singam 2
singam 2

அதேபோல் வடமாநிலத்தில் வெட்டுக்கிளியால் பயிர்கள் பாதித்தன. அதனையும் காப்பான் படத்தில் சூர்யா முன்கூட்டியே கூறியதாகக் கூறினர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக ராம் சரண் மற்றும் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் RRR திரைப்படத்தின் டைட்டில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2வில் இடம்பெற்ற ஒரு காட்சியிலிருந்து தான் ராஜமௌலி படத்தின் தலைப்பை எடுத்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தற்போது இந்த செய்தி தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் உண்மையாகவே ராஜமௌலி இதைப் பார்த்துவிட்டு தான் படத்தின் தலைப்பை எடுத்து இருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கு ராஜமௌலி விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்