வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கண்கொத்தி பாம்பாக நோட்டமிடும் கோபி.. பாக்கியா பழனிச்சாமி இடையே ஏற்படும் உறவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் எவ்வளவு தான் பூகம்பம் வெடித்தாலும் அடுத்த நிமிஷமே ஒண்ணுமே ஆகாத போல் சகஜமான வாழ்க்கையில் அனைவரும் போய்விடுகிறார்கள். இப்பொழுது தான் கோபியின் அம்மா, ராதிகாவை வெளியில் அனுப்பி அதன் பின் போலீசார் வந்து வார்னிங் கொடுத்து திரும்பவும் ராதிகா வீட்டிற்குள் நுழைந்து பிரச்சனை செய்தார்.

ஆனால் அதற்குள் எதுவுமே நடக்காத போல் அந்த வீட்டில் மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். இதற்கு இடையில் பழனிச்சாமியின் கல்யாணம் விஷயமாக பாக்கியா, மாமனாரிடம் ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்கள் என்று சொல்ல, அதற்கு அந்த நேரத்தில் அவருடைய சொந்தக்காரர் ஒருவர் போன் பண்ணி அவருக்கு ஒரு பொண்ணு இருப்பதாக இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

Also read: சொல் புத்தி தன் புத்தி இல்லாமல் திரியும் ஐஸ்வர்யா.. தவறுக்கு மேல் தவறு செய்யும் கண்ணன்

பிறகு இதைக் கேட்ட பாக்கியா அந்தப் பொண்ணை பழனிச்சாமிக்கு பேசி முடிக்கலாமா நீங்க அவங்க கிட்ட கேளுங்க என்று சொல்கிறார். அடுத்து பாக்யாவின் மாமனார் அவர்களிடம் போன் பண்ணி நாளைக்கு வீட்டுக்கு வரும்படி விஷயத்தை சொல்கிறார். உடனே இந்த சந்தோஷமான விஷயத்தை பழனிச்சாமி அம்மாவிடம் சொல்கிறேன் என்று பாக்கியா போன் பண்ணுகிறார்.

அப்பொழுது பழனிச்சாமிடம் பேசுவதை அரைகுறையாக கேட்டு கோபி ரொம்பவே அலப்பறை பண்ணுகிறார். பாக்கியா கோபியை பார்க்கும் பொழுது பிள்ளை இல்லாத விடில் கிழவன் துள்ளி விளையாடுகிறார்கள் என்பது போல் தெரிகிறது. அதாவது பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

மேலும் பாக்கியா ஏற்பாடு பண்ண படி பழனிச்சாமி இவர்களுடன் சம்மதம் செய்து கொண்டு திருமணம் நடந்தால் இவர்களுக்குள் இடையே உறவு நீடித்து விடும். ஆனால் அதே நேரத்தில் திருமணம் வரை சென்று அந்த கல்யாணம் நின்று விட்டால் அப்பொழுது பழனிச்சாமி மற்றும் பாக்கியாவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியா பக்கம் சாயும் கோபி முழுவதுமாக இவருடைய பாசத்தை புரிந்து கொள்ளும் தருணத்தில் ராதிகா அதை கெடுக்கும் விதமாக நந்தியாக எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். கண்டிப்பாக பழனிச்சாமி கல்யாணத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Also read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி

- Advertisement -

Trending News