மணிரத்னம் படத்தில் நடிக்க மறுக்கும் அஜித், விஜய்.. அவங்க சொல்ற காரணமும் சரிதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம் படத்தில் இதுவரை முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜீத், விஜய் நடித்ததில்லை என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு அளவுக்கு அதிகமாக உள்ளது.

இனி வருங்காலங்களில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம். மணிரத்னம் வித்தியாசமான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். இருந்தாலும் ரஜினி மற்றும் கமல் போன்றோருக்கு நாயகன் தளபதி போன்ற மாஸ் படங்களை கொடுத்துள்ளார்,

இன்றும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படங்களாக இந்த இரண்டு படங்களும் இருக்கிறது. மேலும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப காதல் கதைகளை இயக்கி இளம் ரசிகர்களையும் கவர்ந்து வைத்துள்ளார் மணிரத்னம்.

இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் பேரும் புகழும் கொண்ட மணிரத்தினம் ஏன் விஜய் மற்றும் அஜீத் படங்களை இயக்கவில்லை என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. அதற்கான காரணத்தையும் விஜய், அஜித் ஆகியோர் தங்களது வட்டாரங்களில் சொல்லிவிட்டார்களாம்.

மணிரத்தினம் ஸ்டைல் படங்களில் தற்போதைக்கு விஜய், அஜித் நடிக்க முடியாது என்கிறார்கள். விஜய் அஜித் இருவருமே மசாலா படங்களில் நடிப்பதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மணிரத்னம் மசாலா படங்களை இயக்க ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை.

அதேபோல் அவரது கதைகளும் அப்படி அமையாது. இதன் காரணமாகவே மணிரத்னம் படங்களில் விஜய், அஜித் நடிக்க மறுக்கின்றனர். வருங்காலங்களில் மணிரத்னம் படத்தில் விஜய், அஜீத் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு இல்லை.

maniratnam-cinemapettai
maniratnam-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்