சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட ஆதித்த கரிகாலன்.. சோழ சாம்ராஜ்யத்தின் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியான பிறகு அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அதிலும் சோழ வம்சத்தின் பெருமையாக பார்க்கப்பட்ட ஆதித்ய கரிகாலனின் மரணம் குறித்த விஷயங்கள் அதிகமாக தேடப்பட்டு வருகிறது.

சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த கரிகாலன் சந்தேகத்திற்குள்ளான வகையில் மரணித்திருப்பார். இன்று வரையில் அவருடைய மரணத்திற்கான காரணம் இதுதான் என்று தெளிவாக எந்த குறிப்பிலும் விளக்கப்படவில்லை. பொன்னியின் செல்வன் நாவலில் கூட கல்கி இதை சந்தேகமான ஒரு விஷயமாக தான் கூறியிருப்பார்.

அதாவது ஆதித்த கரிகாலன் தான் காதலித்த நந்தினியை பார்ப்பதற்காக கடம்பூரில் இருக்கும் சம்புவரையர் மாளிகைக்கு செல்வார். அப்போது அந்த அறையின் ஒரு பக்கத்தில் வந்திய தேவன், பெரிய பழு வேட்டரையர் ஆகியோர் மறைந்திருப்பார்கள். மற்றொருபுறம் வந்திய தேவனை ஒருதலையாக காதலித்த மணிமேகலை இருப்பார்.

மேலும் ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதற்காக ரவி தாசன், இடும்பன்காரி ஆகியோர் ஒருபுறத்தில் நந்தினியின் சிக்னலுக்காக காத்திருப்பார்கள். நந்தினி எதற்காக ஆதித்த கரிகாலனை பழிவாங்க வேண்டும் என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம்.

அதாவது அப்போது நந்தினிக்கும், கரிகாலனுக்கும் இடையே மிகப் பெரிய வார்த்தை போர் நடக்கும். அந்த சமயத்தில் தான் நந்தினி தான் கரிகாலன் கையால் இறந்து போன பாண்டிய மன்னனின் மகள் என்ற உண்மையை உடைப்பார்.

இதுதான் நந்தினி கரிகால் சோழன் மீது கொண்ட பழியுணர்ச்சிக்கு காரணம். அந்த உண்மையை கூறிய நந்தினி ஓவென்று கதறி அழுது பின்னால் ஒளிந்திருக்கும் ரவிதாசனுக்கு சிக்னல் கொடுப்பார். இதை தெரிந்து கொண்ட வந்திய தேவன் கரிகாலனை காப்பாற்ற முற்படும்போது பழு வேட்டரையர் அவரை தாக்கி மயக்கம் அடைய செய்து விடுவார்.

அப்போது அந்த அறையில் திடீரென ஒரு இருள் ஏற்படும். மீண்டும் வெளிச்சம் வரும்போது ஆதித்த கரிகாலன் இறந்திருப்பார். அவரை யார் கொன்றிருப்பார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. ஆனால் இந்தப் பழி வந்திய தேவன் மீது விழும்.

மேலும் கல்கி அந்த நாவலில் வந்திய தேவன், மணிமேகலை, பழு வேட்டரையர் ஆகியோருக்கு கரிகாலனை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தி இருப்பார். ஆனால் ஒரு இடத்தில் கூட வஞ்சகத்தோடு சோழ நாட்டிற்குள் வந்த நந்தினி நிரபராதி என்று குறிப்பிடாமல் கதையை கொண்டு சென்றிருப்பார்.

அந்த வகையில் ஆதித்த கரிகாலனை கொன்றது இந்த கதாபாத்திரம் தான் என்று அவர் தெளிவாக சொல்லாமலே முடித்து இருப்பார். சந்தேகத்தின் அடிப்படையில் கொலைக்கு உதவியாக இருந்த காரணத்தினால் தான் ரவி தாசன் உள்ளிட்ட பாண்டிய நாட்டு உளவாளிகளுக்கு தண்டனையை ராஜராஜ சோழன் வழங்குவார்.

இது குறித்து உடையார் குடி கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கான தண்டனையும் வித்தியாசமான முறையில் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரவி தாசன், சோமன், பரமேஸ்வரன் ஆகியோர் பிராமண குலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கான தண்டனை மரண தண்டனையாக இல்லாமல் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் அவர்கள் சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதையாக தான் வாழ வேண்டும் என்ற ஒரு தண்டனை கொடுக்கப்படும். இது போன்ற தண்டனையை நீங்கள் சிட்டிசன் திரைப்படத்தில் பார்த்திருக்கலாம். அந்தக் காட்சி இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.

அதிலும் இந்த தண்டனை அவர்கள் கொலைக்கு உதவியாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படும். அந்த வகையில் இவர்தான் கொலைகாரர் என்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு மர்மமாகவே இருக்கிறது. இப்படி வஞ்சத்தால் வீழ்ந்த ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றி மணிரத்தினம் தன்னுடைய திரைப்படத்தில் எப்படி சொல்லி இருப்பார் என்பதை காணும் ஆவல் தற்போது பலருக்கும் எழுந்துள்ளது.

- Advertisement -

Trending News