வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நினைச்சதை விட படு கேவலமாக செயல்படும் ராதிகா.. படிச்சவனு காட்டுவதற்காக செய்த தரங்கெட்ட செயல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பிள்ளபூச்சியாக இருக்கும் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஒரே தெருவில் கோபி வசிக்கிறார்.

இதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக பாக்யாவை டார்ச்சல் செய்யும் புஷ்பா புருஷன் கோபி, இப்போது குடியிருப்பு பகுதியில் நடந்த ஏரியா கவுன்சிலர் போட்டியில் பாக்யாவிற்கு எதிராக ராதிகாவை நிற்க வைத்து படுதோல்வியை சந்திக்க வைத்தார். இதனால் கோபமடைந்த ராதிகா வில்லியாக மாறி பாக்யாவின் முதுகில் குத்தி விட்டார்.

Also Read: பத்தினி வேஷம் போடும் பிக்பாஸ் நடிகை.. பப்ளிசிட்டிக்காக போடும் தந்திரம்

அதாவது பாக்யா வங்கிகளில் கடன் வாங்கி, நிறுவனம் ஒன்றின் மெஸ் ஆர்டரை கைப்பற்றினார். இப்போது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ராதிகா, பாக்யாவின் ஆர்டரை கேன்சல் செய்ய வைத்துவிட்டார். முதலில் ராதிகா, பாக்யாவிற்கு அந்த ஆர்டரை கொடுக்கும்படி பரிந்துரைத்த நிலையில் இப்போது நிறுவனத்தின் மேலதிகாரிகளிடம், ‘பாக்கியலட்சுமியின் மெஸ் சரி இல்லை’ என்று போட்டுக் கொடுத்து ஆர்டரை கேன்சல் செய்து விட்டார்.

Also Read: ராதிகா மூஞ்சில் கரியை பூசிய பாக்யா.. அடுத்தடுத்து வெடிக்கப் போகும் சண்டை

இப்போது என்ன செய்வது என்று விழி பிதுங்கி நெருக்கம் பாக்யா, அடுத்ததாக இதைவிட பெரிதாக இருக்கும் நிறுவனத்தின் ஆர்டரை எழில் உதவியுடன் நிச்சயம் பிடிக்க தான் போகிறார். முன்பு சக்காளத்தி ஆக மட்டுமே இருந்த ராதிகா, தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் இப்போது வில்லியாக மாறி நிற்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் கோபி. அதுமட்டுமின்றி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாக்யா, ‘படிப்பு மட்டுமே பொறுப்புக்கு அடிப்படை அல்ல’ என்று ராதிகாவை குத்தி பேசியது இப்போது அவருக்கே வினையாய் ஆகிவிட்டது.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

மேலும் ராதிகா தேர்தலில் தோல்வியை சந்தித்த காரணத்தினால் படித்தவர் என்பதை காண்பிப்பதற்காக நினைத்ததை விட படு கேவலமாக ஆர்டரை கேன்சல் செய்திருப்பது சீரியல் ரசிகர்களிடம் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார். மேலும் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்றும் சிலர் இந்த சீரியலின் போக்கை கவனித்து கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

Trending News