பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல நடிகை.. அட இவங்க ரஜினி பட வில்லி ஆச்சே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகின்றனர். அந்த வகையில் ஓவியா, கவின், லாஸ்லியா உள்ளிட்டோர்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்ந்து நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக எந்தெந்த பிரபலங்கள் இம்முறை கலந்துகொள்ள போகிறார்கள் என்று ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் நடிகர் நடிகைகளில், ராதா ரவி, பூனம் பஜ்வா, உள்ளிட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கலாம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் முன்னணி நடிகையும், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவருமான நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

ramya-krishnan-cinempettai-02
ramya-krishnan-cinempettai-02

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகமே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்