ராஜீவ் மேனன் இயக்கிய 4 படங்கள்.. அண்ணனிடம் இருந்து லவ் பட யுத்தியை கத்துக்கிட்ட கௌதம் மேனன்

Rajiv Menon directed romantic films list: தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் அதிகமாக கவனம்  ஈர்த்து இருந்தவர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக அறியப்படும் ராஜீவ் மேனன் அவர்கள். தனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையே அதிக இடைவெளி எடுத்து கலைஞனுக்கே உரித்தான பொறுமையுடன் பக்குவமாக திரை கதையை வடிவமைத்து  படங்களை மெருகேற்றுவதில் வல்லவர். தமிழ் சினிமாவில் இவர் இயக்கத்தில் வெளிவந்த  நாலு படங்களுமே வித்தியாசமான கதை அம்சத்துடன் ரசிகர்களை வியப்பூட்டிய படங்கள் எனலாம்.

சர்வம் தாள மையம்:  இசையை கருவாக்கி தனிச்சிறப்புடன் திரைக்கதையை அமைத்து ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்வம் தாள மையம்.  இப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைய விட்டாலும் விமர்சன ரீதியாக பலத்த கைத்தட்டலை பெற்றது எனலாம்.

Also read:  கட்டத்துரைக்கு கட்டமே சரியில்ல.. நாலா பக்கமும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு போடப்பட்ட கேட்

மின்சார கனவு:  ராஜீவ் மேனன் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் மின்சார கனவு. முக்கோண காதல் கதையை கருவாக வைத்து காதலிக்க ஆசைப்பட்டவரை சாமியாராகவும், சாமியாராக போக இருந்த பெண்ணை இல்லற வாழ்க்கையிலும் புகுத்தி காலத்தின் விளையாட்டை  கட்சிதமாக வெளிப்படுத்தி இருந்தார் ராஜீவ் மேனன். கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் ராஜு மேனனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் இவர் கௌதமின் ஆஸ்தான குரு ஆவார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:  முதல் படத்திற்கு பின் மூன்றாண்டு இடைவேளை எடுத்து மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு என முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு காதலை, அதன் வலியை, சோகத்தை என ஒவ்வொரு உணர்வையும் அற்புதமாக உணர வைத்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

புத்தம் புது காலை:  ரீ யூனியன் என்கிற தலைப்பில் இடம்பெற்ற காதல் கதையே ஆகும்.   கொரோனா விடுமுறைக்கு வரும் தனது பள்ளி  தோழியை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் காதலனின் உணர்வு போராட்டம் தான் ரியூனியன்.

கலை மீது தீரா தாகம் கொண்ட ராஜீவ் மேனன் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சுப்பிரமணியன் கேரக்டரில் நடித்திருந்தார். ராஜீவ் மேனன் மணிரத்தினத்தின் பம்பாய், குரு, கடல் போன்றவற்றிற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Also read: தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் இசையமைப்பாளர்.. கால்கட்டு போட நினைக்கும் பெற்றோர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்